சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்
21 Jun 2026, 2:07 am
<p><strong>சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்</strong></p><p>வேலூர், ஜூன் 20- காட்பாடி அருகே மகிமண்டலம், விண்ணம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 3,200 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் அளவி டும் பணிக்குக் கடிதம் வந்ததைக் கண்டித்து, காட்பாடி-வள்ளிமலை சாலையில் விவசாயிகள் சனிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி விவசாயிகள் இப்போராட்டத்தை நடத்தி னர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் மகேஸ்வரி மற்றும் காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நில அளவீடு செய்யப்படாது என உறுதியளித்து 10 நாட்கள் அவகாசம் கோரியதால் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. நல்ல முடிவு வராவிடில் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனிடையே, அங்கு வந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகரை முற்றுகையிட்ட விவசாயிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர், 'ஜல்லிக்கட்டு போன்ற பெரிய போராட்டம் நடத்தினால் தான் தீர்வு கிடைக்கும்' என்றார்.</p>
