தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்கியதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

5 Nov 2026, 10:29 pm
விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்கியதை   எதிர்த்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்கியதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,நவ.5-நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்திடும் விவசாய திட்டங்களின் சலுகைகளை பெறவும், உரங்களை வாங்கிடவும், பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் விவசாய அடையாள எண் ( (Farmer ID) கட்டாயம் என அறிவித்திருப்பதை கண்டித்தும் ஒன்றிய அரசின் அடையாள அட்டை கட்டாயம் என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாமல் பழைய முறைப்படியே விவசாயிகள் அரசின் சலுகைகளை பெற அனுமதித்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் முஜூப்பூர் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் உரையாற்றினார். தாலுகா செயலாளர் ம.மலைக்கனி, மாவட்ட துணைச்செயலாளர் பத்மாவதி, சிபிஎம் தாலுகா செயலாளர் ஜோதி ஆகியோர் பேசினர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி ஒன்றிய தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஆர்.ராகவன், மாவட்ட நிர்வாகிகள் மணி, செல்வராஜ், ஜி.ராமசுப்பு, பாலமுருகன் ஆகியோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.