தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உர விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

26 May 2026, 11:40 pm
உர விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

உர விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

​​​​​​​உடுமலை, மே 26- உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உர விலை உயர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு முதல்வர் அறி வித்துள்ள பயிர்கடன் தள்ளுபடி மோசடியானது.

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கர் வரையி லான விவசாயிகளுக்கு முழு தள்ளு படியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சத விகித கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்களின் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை தாலுகா அலுவல கம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் அ.பால தண்டபாணி தலைமை வகித்தார்.

இதில் மாவட்டச் செயலாளர் ஆர். குமார், மாவட்டத் தலைவர் வெ. சௌந்தரராஜன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.கேசவன், மடத் துக்குளம் தாலுகா செயலாளர் எம். எம்.வீரப்பன், உடுமலை ஒன்றியச் செயலாளர் த.அருண்பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பேருந்து நிலைய வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாவட்டத் தலைவர் ஏ.எம்.முனு சாமி, (சிபிஐ) மாநில துணைத்தலை வர் சி.எம்.துளசிமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன், சிபிஐ வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் எம்.குணசேக ரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனி சாமி, துணைத்தலைவர் எஸ்.பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட துணைச்செயலாளர் பி.சடையப் பன் நன்றி கூறினார்.

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வேலாயுதம் தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மாவட் டத் தலைவர் ஏ.ஆதிநாரயணன், ஈ. கோவிந்தராஜ், துணைத்தலைவர் என்.ஜோதி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ். நல்லாகவுண்டர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் எம்.செல்வம், சிபிஐ மாவட்டச் செயலாளர் அன்புமணி, சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா ளர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் சு.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி, மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், பொருளாளர் தங்க வேலு, விவசாயிகள் சங்க நிர்வாகி கள் பெரியசாமி, ஆறுச்சாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.