அந்நிய நேரடி முதலீடு, விதைச் சட்டத்திற்கு எதிராக மோடி, டிரம்ப் உருவப் பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
23 Jul 2026, 10:52 pm
<p><strong>அந்நிய நேரடி முதலீடு, விதைச் சட்டத்திற்கு எதிராக மோடி, டிரம்ப் உருவப் பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, ஜூலை 23 - விவசாயத்தில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்கும் ஒப்பந்தத்தை எதிர்த்தும், ஒன்றிய அரசின் விதைச் சட்டத்தை கண்டித் தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மோடி – டிரம்ப் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வே.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் மு.பெரியசாமி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர் பா.அசோக் ராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா. நடராஜன் ஆகி யோர் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து மோடி – டிரம்ப் உருவப் பொம்மையை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து தடுத்தனர். இந்தப் போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் கணபதிசாமி, செல்வதுரை, மா.பிச்சை, ஜெய ராஜ், மருதையா, கருப்பையா, எம்.பி.ரவி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடைகாலில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் கணபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.வேலு மயில் மற்றும் மாவட்டப் பொருளாளர் திருமலைகுமார், செல்லத்துரை ஆகி யோர் கலந்து கொண்டனர். கடையம் ஒன்றியக் குழு சார்பில், சம்பன்குளம் பேருந்து நிலை யம் முன்பு ஒன்றியச் செயலாளர் இரா. முத்துரா ஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எம். ராமகிருஷ் ணன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து உரை யாற்றினார். மசூது நன்றி உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடையம் ஒன்றியக் குழு உறுப்பினர் மா.முத்துகிருஷ் ணன், சம்பன்குளம் தலைவர் மீரான் மைதீன், அழகப்பபுரம் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கோதரி பாவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பன்குளம் கிளைச் செயலாளர் செந்தில், அழகப்பபுரம் கிளைச் செயலாளர் பிரகாஷ், முத்துராஜ், ராமகளஞ்சியம் உள்ளிட்டோர் மற்றும் சம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
