நெல் கொள்முதல் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் மனு!
7 Jun 2026, 1:58 am
<p><strong>நெல் கொள்முதல் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் மனு!</strong></p><p>திருவண்ணாமலை, ஜூன் 6 - திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மழையூர், பென்னாட்டகரம், குவளை உள்ளிட்ட பகுதிகளில், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த தொகை வழங்கப்படாத காரணத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நெல் கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. லட்சு மணன், நிர்வாகி ந. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப. செல்வன், வழக்கறிஞர் எஸ். அபிராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ச. குமரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.</p>
