கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரி திண்டுக்கல்லில் விவசாயிகள் மனு கொடுக்கும் இயக்கம்
20 Jan 2026, 2:46 pm
<p><strong>கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரி திண்டுக்கல்லில் விவசாயிகள் மனு கொடுக்கும் இயக்கம்</strong></p>
<p>திண்டுக்கல், ஜன.20– கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப் படும் வளர்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் லில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு கொடுக் கும் இயக்கம் நடத்தினர். செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த இயக் கத்திற்கு, கறிக்கோழி வள ர்ப்பு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம். பெரியசாமி தலைமை தாங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் என்.பெருமாள், விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் எம்.ராம சாமி, மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ஏ. குணசேகர், மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கறிக்கோழி தீவனம், மருந்து, மின்சாரம், தொழி லாளர் கூலி உள்ளிட்ட செல வுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போதுள்ள வளர்ப்பு கூலி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வரு வதாகவும், எனவே உடனடி யாக கிலோவுக்கு ரூ.20 வளர்ப்பு கூலி நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
