ரூ. 14 கோடி பயிர் காப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி விவசாயிகள் மனு
18 Dec 2025, 5:31 pm<p><strong>ரூ. 14 கோடி பயிர் காப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி விவசாயிகள் மனு</strong></p>
<p>விழுப்புரம், டிச. 18- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ரூ. 14 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு பருவத்தில் பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகள், பெஞ்சல் புயல் பாதிப்பால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். இது தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநரிடம் மனு அளித்த பின் பேசிய மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், கண்டமங்கலம், காணை மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல கிராமங்களில் ஓராண்டு கடந்தும் இன்னும் இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது என்றார். மாவட்ட ஆட்சியரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.</p>
