தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காட்டுப்பன்றிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள்!

30 Nov 2025, 4:29 pm
காட்டுப்பன்றிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள்!
<p><strong>காட்டுப்பன்றிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள்!</strong></p> <p>ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் குத்தியாலத்தூர், குன்றி, திங்களூர் போன்ற ஊராட்சிகள் உள்ளன. மானாவாரி &nbsp;விவசாயம் தான் இங்கு வசிக்கும் &nbsp;மக்களின் வாழ்வாதாரம். மர வள்ளி எனப்படும் குச்சிக்கிழங்கு விவசாயம் செய்து வந்தனர். இவற்றை 6 முதல் 12 மாதங்கள் வரை பாதுகாத்து அறுவடை செய்ய வேண்டும். எனவே குறு கிய கால விவசாயமான மக்காச் சோளத்திற்கு மாறியுள்ளனர். இப் பயிர் 100 முதல் 110 நாட்களுக்குள் &nbsp;அறுவடைக்குத் தயாராகும். ஏக் கருக்கு சுமார் 20 மூட்டைகள் அறு வடை செய்யப்படும். இதன் மூலம் &nbsp;சுமார் ரூ.40 ஆயிரம் வரை பெற முடி யும். விதைப்பதற்கு முன்பு உழது &nbsp;நிலத்தை பண்படுத்துவது அவசி யம். டிராக்டர் மூலம் செய்யப்படும் &nbsp;உழவு கூலியாக ஒரு மணி நேரத் திற்கு ரூ.1200 செலவாகும். இவ் வாறு மூன்று முறை உழவு செய்ய &nbsp;வேண்டும். மண்ணை காற்றோட்ட மாக பண்படுத்திய பிறகு மாடு களின் உதவியுடன் ஏர் உழவு செய்து விதைக்க வேண்டும். அதற்கு ரூ.1500 செலவாகும். இயந்திர விதைப்பும் உண்டு. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். இதன் விலை ரகத்திற்கு ஏற்ப மாறினாலும் ரூ.2800 தேவை. விதைப்பு முடிந்து &nbsp;பயிர் வளர்ந்து கிளைக்கும். அதன் பிறகு புடை விட்டு கதிர் உருவா கும். இதற்கு முன்பாக அடியுரம் இட &nbsp;வேண்டும். முளைப்பு பருவத்தில் &nbsp;மேல் உரம் இட வேண்டும். இத னைத் தொடர்ந்து முளைக்கும் களைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு பயிரைக் காப்பாற்றி வந்தாலும் குறுத்துப் புழு என்ற &nbsp;அமெரிக்கன் படைப்புழு தாக்கும் &nbsp;அபாயமும் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும். பெரும்பாலும் வானம் &nbsp;பார்த்த பூமி தான் என்றாலும் உரிய &nbsp;தண்ணீருடன் தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து ஆகியவற் றைப் பெற்றால் தான் உரிய விளைச்சல் கிடைக்கும். அறு வடை செய்து சோளக்கதிரிலி ருந்து மணிகளைத் தனியே பிரிக்க &nbsp;வேண்டும். அவற்றை மூட்டைகளா கப் பிடித்தால் சுமார் 20 மூட்டை கள் கிடைக்கும். தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் மேற் கண்ட செலவுகளுக்கு குறைந்த &nbsp;பட்சம் ரூ.30 ஆயிரம் தேவைப்ப டும். பட்டா வைத்துள்ளவர்கள் வங்கிகளில் கடன் பெறலாம். இல்லாதவர்கள் குத்தகைக்கு ஒரு &nbsp;தொகையைக் கொடுக்க வேண் டும். வெளியில் கடன் வாங்கி னால் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும். விளைச் சலைக் கொள்முதல் செய்வோரி டமே பலரும் கடன் படுகின்றனர். அதனால் சந்தை மதிப்பிலான கிரையத்தைப் பெற முடியாது. சற்று தள்ளி அவர்கள் தீர்மானிப் பதே விலையாகக் கிடைக்கும். அதையே நியாயம் என்று வேறு வழியில்லாமல் விவசாயிகள் பெறுவது வாடிக்கையாகி வரு கிறது. இத்தனை தடைகளைத் தாண்டுவதற்கிடையில் காட்டுப் பன்றிகள் நுழைந்து விடுகின்றன. அவை சோளத் தட்டையும் உண்கி றது. கதிரையும், சோளத்தையும் உண்கிறது. முன்பெல்லாம் ஒன்றி ரண்டு வரும். விரட்டினால் ஓடி &nbsp;விடும். ஆனால் இப்போது காட்டுப் பன்றிகள் பல்கிப் பெருகிவிட்டன. அதனால் கூட்டம் கூட்டமாக வரு கிறது. பெரும்பாலும் இரவு நேரங் களில்தான் வரும். இப்போதெல் லாம் பகலிலும் வரத்தொடங்கி விட் டன. கொக்கு, குருவி போன்ற பற வையினங்களைப் போல காட்டுப் பன்றிகள் தனியாளாக விரட்ட வரும் விவசாயிகளைக் கண்டு பயப்படுவதில்லை. தாக்க வரு கின்றன. வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்ற வேட்கை யில் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வர்களும் உண்டு. எனவே வனத் துறையை அழைக்க வேண்டியுள் ளது. இந்த மோதலில் விவசாயிகள் &nbsp;காயங்களுடன் தப்பித்தாலும் விவ சாயம் முற்றிலும் பாழாகி விடுகி றது. கடந்த காலங்களில் அரசாங் கம் குறிப்பிட்ட தொகையை இழப் பீடாக வழங்கும். தற்சமயம் வனத் துறையே இழப்பீட்டைக் கணக் கிட்டு வழங்கும் நடைமுறை உள் ளது. ஒரு ஏக்கர் விவசாயம் முழு வதும் அழிக்கப்பட்டிருந்தாலும் அதிகபட்சம் வனத்துறை வழங்கு வது ரூ.10 ஆயிரம் மட்டுமே. அதற் கும் 6 மாதத்திலிருந்து ஒரு வருட மும் ஆகிவிடுகிறது. ஆனால் முட்டு வலி செலவு ரூ.30 ஆயிரத்தைக் கடக்கும். இவ்வாறு காட்டுப்பன்றி களால் கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசா யம் அழிவின் விளிம்பில் உள்ளது. &nbsp;இதனை நம்பியுள்ள விவசாயிகள் &nbsp;கடுமையாக பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். அரசு உரிய நடவ டிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளி டமிருந்து விவசாயத்தைக் காக்க &nbsp;வேண்டும். அருகிலுள்ள கேரளத் தைப் போல காட்டுப்பன்றிகளிடமி ருந்து காப்பாற்ற உரிய வழிமுறை களைப் பின்பற்ற வேண்டும். பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உரிய காலத்தில் வழங்க &nbsp;வேண்டும். -சக்திவேல், ஈரோடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.