‘வன உரிமைச் சட்டத்தின் கீழ் 3 மாதத்திற்குள் நிலப் பட்டா’ விவசாயிகளின் நீண்ட நடைபயணம் வெற்றி; பணிந்தது மகாராஷ்டிர மாநில அரசு!
28 Jan 2026, 2:33 pm
<p><strong>‘வன உரிமைச் சட்டத்தின் கீழ் 3 மாதத்திற்குள் நிலப் பட்டா’ விவசாயிகளின் நீண்ட நடைபயணம் வெற்றி; பணிந்தது மகாராஷ்டிர மாநில அரசு!</strong></p>
<p>நாசிக் - மும்பை, ஜன. 28 - மகாராஷ்டிராவின் செங்கொடி இயக்கம் மீண்டும் ஒருமுறை தன் வலிமையை நிரூபித்துள்ளது. வன உரிமை, நிலப் பட்டா மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிப் பல்லாயிரக்கணக்கான விவசாயி கள் மேற்கொண்ட ‘நீண்ட நடைப் பயணம்’ (Long March), மாநில அரசைப் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்து, வர லாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் திரண்ட விவசாயிகளின் இந்த எழுச்சி, அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கைத் தகர்த் தெறிந்துள்ளது. சிவப்புக் கடலாய் மாறிய தேசிய நெடுஞ்சாலை கடந்த ஜனவரி 25 அன்று நாசிக்கின் தபோவன் பகுதியில் தொடங்கிய இந்தப் பயணம், ஒரு மாபெரும் சிவப்புக் கடலைப் போல மும்பையை நோக்கி நகரத் தொடங்கியது. சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயி கள் மற்றும் தொழிலாளர்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் செங்கொடிகளை ஏந்தி பல மைல் தூரம் நடைப்பயண மாகச் சென்றனர். முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆயிரக்கணக் கானோர் கால்களில் செருப்புகூட இன்றி, இரத்தக் காயங்களையும் தாண்டித் தங்கள் உரிமைக்காகக் காட்டிய உறுதி, இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த மாநில அரசு, விவசாயிகள் மும்பையை அடைவதற்கு முன்னதாகவே பதற்ற மடைந்து, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் கிடைத்த முக்கியமான வெற்றிகள் ஜனவரி 27 அன்று முதல மைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் குழுக் கூட்டத்தில், விவசாயி கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.பி. காவித் மற்றும் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அஜித் நவாலே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பல மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், விவசாயி களின் நியாயமான கோரிக்கைகள் ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்ளப் பட்டன. குறிப்பாக, வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலப் பட்டா கோரி விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைத்து மனுக்களையும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மாவட்ட அளவில் மறுஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு நில உரிமை வழங்க அரசு சம்மதித்தது. இது பழங்குடியின விவசாயி களின் பல பத்தாண்டுகாலப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. உறுதிமொழிகளும் போராட்டத் தற்காலிக விடுப்பும்... நில உரிமை மட்டுமின்றி, பழங்குடியினப் பகுதிகளில் உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நதிநீர்த் திட்டங்களை விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் மாற்றியமைக்கவும் அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. மேலும், விவசாயத்திற்குத் தடையற்ற 12 மணிநேர மின்சாரம் மற்றும் மதிய உணவு ஊழியர்களின் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இந்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து, ஜனவரி 28 அன்று போராட்டக் குழுவினர் விவசாயிகளிடையே வெற்றியை அறிவித்தனர். அரசு அளித்துள்ள வாக்குறுதிகள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிப்போம் என்றும், தவறினால் மீண்டும் போராட்டக் களத்தைச் சந்திப்போம் என்றும் ஜே.பி. காவித் எச்சரித்துள்ளார். இந்த வெற்றி, இந்திய விவசாய இயக்கங்களின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.</p>
