தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேளாண் கல்வியில் ஊடுருவிய புதிய கல்விக் கொள்கை வேதனையில் விவசாயிகள்!

17 Feb 2026, 3:36 pm
வேளாண் கல்வியில் ஊடுருவிய புதிய கல்விக் கொள்கை வேதனையில் விவசாயிகள்!
<p><strong>வேளாண் கல்வியில் ஊடுருவிய புதிய கல்விக் கொள்கை வேதனையில் விவசாயிகள்!&nbsp;</strong></p> <p>ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை (NEP 2020) தமிழ்நாடு அரசு கொள்கை ரீதி யாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் கடுமையாக நிராகரித்துள்ளது. மாநிலத்தின் கல்விச் சுயாட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற &nbsp;அசைக்க முடியாத நிலைப்பாட்டு டன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வரும் நிலை யில், கோவை வேளாண்மைப் பல் கலைக்கழகம் வழியாக இக்கொள் கை மறைமுகமாகத் திணிக்கப்படு வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. &ldquo;முன்வாசல் வழியாக விரட்டியடிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, பின்வாசல் வழி யாக நுழைந்திருப்பது&rdquo; கல்வி யாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. &nbsp;மறைமுக ஊடுருவல் மற்றும் தன்னாட்சி ஆபத்து &nbsp;மாநில அரசின் நிதியில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் (ICAR) வழிகாட்டுதல் என்ற பெயரில், &lsquo;ஆறாவது டீன் &nbsp;கமிட்டி&rsquo; அறிக்கையை அமல்படுத்தி யுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு எதிர்க்கும் புதிய கல்விக் கொள்கையின் கூறுகள் பாடத் திட்டத்திற்குள் ஊடுருவியுள் ளன. 2030-க்குள் பல்கலைக்கழ கங்களைப் பலதுறை உயர்கல்வி நிறுவனங்களாக மாற்றுவது மற்றும் 2035-க்குள் &ldquo;இணைப்பு&rdquo; (Affilia tion) முறையை முழுமையாக ஒழிப்பது போன்ற பாதுகாப்பு முக்கி யத்துவம் வாய்ந்த மாற்றங்கள் இதில் திட்டமிடப்பட்டுள்ளன. இணைப்பு முறை ஒழிக்கப்பட்டால், கல்லூரி கள் தன்னாட்சி பெற்று, கல்வி &nbsp;கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளது. இது ஏழை மாணவர் களுக்கு வேளாண் கல்வியை எட்டாக்கனியாக மாற்றிவிடும். &nbsp;கல்வித் தொடர்ச்சியைச் சிதைக்கும் &lsquo;வெளியேறும்&rsquo; முறை &nbsp;புதிய கல்விக் கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள &lsquo;பல முறை வெளியேறும்&rsquo; (Multiple Entry/Exit) வசதி, மாணவர் நல னுக்கானது போல் ஆசை வார்த்தை களாகத் தோன்றினாலும், உண்மை யில் இது ஏழை மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியைச் சிதைக்கும் ஆயுதமாகும். முதலாம் ஆண்டு &nbsp;முடிவில் சான்றிதழ், இரண்டாம் ஆண்டில் பட்டயம் எனப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தத் தூண்டும் இம்முறை, பொருளாதார நெருக்கடி யில் உள்ள கிராமப்புற மாணவர் களைப் பட்டப்படிப்பை முடிக்க விடாமல் வெளியேற்றும் சூழலை உருவாக்கும். இது உயர்கல்வியில் இடைநிற்றலை (Drop-outs) சட்டப்பூர்வமாக்கும் செயலாகும். மேலும், இவ்வாறு பாதியில் வெளி யேறும் மாணவர்களுக்கு முறை யான வேலைவாய்ப்பு உறுதி செய்யப் படுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியே. &nbsp;முரணான நிதி ஒதுக்கீடும் சிதைக்கப்படும் பட்டயப் படிப்புகளும் &nbsp;தமிழக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண் பல்க லைக்கழகத்தின் வளர்ச்சிக்காக ரூ.3,065 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மாநிலத்தின் இந்த வரிப்பணம், மாநில அரசின் கொள்கை நிலைப் பாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுவது முரண்பாடானது. மேலும், வம்பன், குமுளூர், பேச்சிப்பாறை, தளி, மாதவரம், திரு வண்ணாமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பல &nbsp;ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு நிறுவனங்கள் தற்போது மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்தப் பட்ட யப் படிப்பு முடித்த மாணவர்கள் தமிழக அரசின் வேளாண் துறையில் உதவி அலுவலர் பணிகளுக்குச் செல்கின்றனர். இத்தகைய நிறு வனங்களை முடக்குவது, அரசு வேலைவாய்ப்பை நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பத்து மாணவர்களின் எதிர்கா லத்தைப் பாழாக்கும் செயலாகும். &nbsp;வேரை வெட்டி நீர் ஊற்றுதல் &nbsp;வேளாண்மையை வெறும் லாபம் தரும் தொழில்முனைவோர் மாதிரியாகவும், கார்ப்பரேட் நிறு வனங்களுக்குத் தேவையான சேவை மையங்களாகவும் மாற்ற முனையும் புதிய கல்விக் கொள்கை, அதன் சமூகப் பண்பாட்டு வேர் களைப் புறக்கணிக்கிறது. கிராமப்புற மாணவர்கள் நவீன அறிவியலைக் கற்றுத் தங்கள் மண்ணைச் செழிக்க வைக்கவே இக்கல்விக்குள் வரு கின்றனர். ஆனால், இக்கொள்கை &nbsp;அவர்களை வெறும் &lsquo;தொழில் முறைப் பணியாளர்களாக&rsquo; மட்டுமே மாற்ற முயல்கிறது. மாநிலத்தின் கல்விச் சுயாட்சி யைக் காக்க, வேளாண் கல்வியில் ஒன்றிய அரசின் இந்த மறைமுக ஊடு ருவலைத் தடுத்து, தமிழக அரசே நமது மண்ணுக்கேற்ற, சமூக நீதி &nbsp;சார்ந்த கல்வி முறையை வடிவ மைக்க வேண்டும் என்பதே விவ சாயிகள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைந்த குரலாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.