ரூ.4.5 கோடி கூட்டுக் கொள்ளை கூட்டுறவுத்துறை அதிகாரிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>ரூ.4.5 கோடி கூட்டுக் கொள்ளை கூட்டுறவுத்துறை அதிகாரிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>விழுப்புரம், நவ.20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் ரூ.4.5 கோடி மோசடி நடந்த விவகாரத்தில், முறைகேட்டுக்குத் துணை போன மாவட்டக் கூட்டுறவு அதிகாரிகளைக் கைது செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வயிற்றில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. 2016-ஆம் ஆண்டில் கூட்டுறவுச் செய லாளர் ஒருவர், முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, சுமார் ரூ.4.5 கோடி பணத்தை ரொக்கமாக வசூ லித்துள்ளார். இந்தப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாத நிலையில், 2021-ல் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையில், வசூலில் ஈடுபட்ட செய லாளர் இறந்துவிட்டதால், முதலீடு செய்த வர்கள் பணத்தைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்தச் செயல் மாவட்டக் கூட்டுறவு அதிகாரிகளும் செயலாளரும் இணைந்து நடத்திய கூட்டுக் கொள்ளை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, முதலீடு செய்யப்பட்ட பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இறந்த முதலீட்டாளர்களின் வாரிசுகளுக்கும் பணம் வழங்கப்பட வேண்டும் என்றும் விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அப்போது பணியில் இருந்த, விவ சாயிகளின் பணத்தைக் கூட்டுக் கொள்ளை யடித்த மாவட்ட அதிகாரிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர்க்கடன்களை விவ சாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியது. இந்தப் போராட்டத்திற்கு வட்டத் துணைத் தலை வர் வி. நரசிம்மராஜ் தலைமை தாங்கினார்.</p>
