தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள்!

14 Nov 2025, 1:26 pm
10 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள்!
<p><strong>10 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள்!</strong></p> <p>ஈரோடு, நவ.14- ஆண்டுக்கணக்கில் மின் இணைப் புக்காக காத்திருந்து, வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி, &nbsp;இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியதால் விவசாயிகள் மிகுந்த வேதனைய டைந்துள்ளனர். ஈரோடு குருவரெட்டியூரைச் சேர்ந்த நாராயணன், தனக்கு சொந்த மான 1 .35 &nbsp;ஏக்கர் மானாவாரி நிலத்தில் நிலக்கடலை, சோளம் போன்ற பயிர் களை மட்டுமே சாகுபடி செய்து வந் தார். போதிய நீர்ப்பாசன வசதி இல் லாததால், ஆண்டின் ஆறு மாதங்கள் விளைநிலம் சும்மாவே கிடந்தது. இந்நிலையில், கடந்த 2016 ஜன வரியில் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஒரு அறி விப்பு வெளியானது. அதில், &ldquo;50 &nbsp;விழுக்காடு மானியத்துடன் வங்கி யில் கடன் பெற்று ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைத்தால், அடுத்த 60 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்&rdquo; எனக் கூறப்பட்டது. இந்த அறிவிப்பை நம்பி, நாரா யணன் வங்கியில் கடன் பெற்று ஆழ் துளை கிணறு அமைத்தார். ஆனால், அறிவிக்கப்பட்டபடி அவ ருக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதுகுறித்து அவர் கூறுகை யில், &ldquo;நான் பெற்ற கடனுக்கு வட்டி &nbsp;மட்டும் ரூ. 24,000 சேர்த்து, வங்கிக் கடனையும் அடைத்தேன். ஆனால், மின் இணைப்பு மட்டும் கிடைக்க வில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் அங்கிங்கு என அலைக்கழித்தனர். கோபியில் உள்ள வருவாய் கோட் டாட்சியரைப் பார்த்தால், &lsquo;உத்தரவு வரவில்லை&rsquo; என்று கூறுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென் றும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு 11 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறேன். இடையில் ஆயில் இன்ஜின் வைத்து ஓட்டிப் பார்த்தேன். அது கட்டுப்படியாகா மல், நட்டம்தான் மிஞ்சியது. ஒரு &nbsp;லட்சம் இணைப்புகள் கொடுத்துள் ளதாக அரசு கூறுகிறது. எனக்கு மட் டும் ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை,&rdquo; என தனது ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். நாராயணனைப் போலவே அப்ப குதியில் மேலும் பல விவசாயிகள் மின் இணைப்பு வழங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் மின் இணைப்புக்காகக் காத்திருப் பதாகக் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து, மின் இணைப்பு &nbsp;வழங்கப்பட்டாலும், அவர்கள் மீண் டும் ஒரு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட லாம். ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகள் தூர்ந்து போயி ருக்கலாம் அல்லது பயன்படுத்த முடி யாத நிலையில் இருக்கலாம். மானாவாரி நிலத்தில் விவசாயம் &nbsp;செய்ய முடியாமல், மின் இணைப் புக்காக கடன்பட்டு காத்திருக்கும் அப்பாவி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலை யிட்டு, நிலுவையில் உள்ள மின் இணைப்புகளை வழங்கவும், பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய &nbsp;தீர்வை வழங்கவும் வேண்டும் என் பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.