சென்னை விரைவு செய்திகள்
13 Nov 2025, 3:30 pm

திருவண்ணாமலையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை, நவ.13- திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் வெள்ளியன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண்வணிகம், வேளாண் பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை. வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கை களை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

கஞ்சா போதையில் தாய் கொடூரக் கொலை : இளைஞர் வெறிச் செயல்

கடலூர், நவ.13- கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 60) இவருடைய கணவர் உயிரிழந்த நிலையில் விஜய் (வயது 28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் விஜய் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அடிக்கடி போதையில் வந்து தாய் ராஜலட்சுமியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது தாய் வீடான வேலூருக்கு கடந்த வாரம் சென்று தங்கி வந்துள்ளார். புதன் கிழமை இரவு வீட்டுக்கு வந்த ராஜ லட்சுமியிடம் நள்ளிரவில் மது போதையில் வந்த விஜய் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்பொழுது ஆத்திர மடைந்த விஜய் வீட்டில் இருந்த மைக்ரோ ஓவனை தூக்கி ராஜலட்சுமி தலையில் போட்டு கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராஜலட்சுமி உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி மல்லிகா உடனே பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அடிப்படையில் போலீசார் ராஜலட்சுமி உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு பண்ருட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விஜயை பிடித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் நிறுத்தம்

திருவண்ணாமலை, நவ.13- திருவண்ணாமலை மின் நிலையத்தில் வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட அண்டாப்பட்டு, வட அரசம்பட்டு கீழ் நாச்சிபட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென்அரசம்பட்டு, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சானா னந்தல், குண்ணியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல், மற்றும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடு மங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சேர்ந்த பகுதிகளிலும் மின்விநி யோகம் இருக்காது என மின்வாரிய மேற்கு கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தீப விழா விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை, நவ.13- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பொதுமக்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என திருநங்கைகளிடம், மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கூட்டம் வியாழனன்று (நவ.13) திருவண்ணாமலையில் நடை பெற்றது.

விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

விழுப்புரம், நவ. 13- விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனையாளர்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனுவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி மற்றும் இதர பயிர்களுக்குத் தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர்பாஸ்பேட் போன்ற உரங்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எம்ஆர்பிக்கு மேல் விற்கக்கூடாது மானியம் இல்லாத பிற உரங்களுடன் சேர்த்து மானிய உரங்களை விற்பனை செய்யக் கூடாது. பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ அல்லது அங்கிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. விவ சாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை விற்பனை செய்யக் கூடாது. உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது. ஒரே விவசாயியின் பெயரில் தேவைக்கு அதிகமாக உரங்களை விற்பனை செய்யக் கூடாது.உரிமம் பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைக்கக் கூடாது. விவசாயிகள் மண்வள அட்டைப் பரிந்துரைப்படி உரமிட்டுச் செலவைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.