திருச்சி விரைவு செய்திகள்
9 Jan 2026, 3:41 pm
<p><strong>ஜன.20 இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம்</strong></p>
<p>இராமநாதபுரம், ஜன.9 இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இராம நாதபுரம் வருவாய் கோட்ட அளவில் வருகின்ற 20.01.2026 (செவ்வாய்க் கிழமை) அன்று முற்பகல் 11 மணியள வில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ. ஹபிபூர் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் : ஓட்டுநர் மீது வழக்கு திருவில்லிபுத்தூர்,ஜன.9- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராய ணன். இவரும் இவரது நண்பர் மாயராஜ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் கோட்டையூர் சென்று விட்டு மீண்டும் கொண்டையம்பட்டிக்கு தைலாபுரம் வழியாக வந்துகொண்டிருந்தனர். அப்போது மாரி முத்து என்பவர் அதிவேகமாக காரில் வந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவருக்கும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது .இன்னொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை மாவட்டம் பாபி ரெட்டியூபட்டியை சேர்ந்த பாண்டியராஜன், கூமா பட்டி யைச் சேர்ந்த காளிராஜன் இருவர் மீதும் மோதி அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது .நாராயணனும் மாயராஜ் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாண்டியராஜன், காளிராஜ் ஆகியோர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நாராய ணன் கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி காவல்துறை யினர் மாரிமுத்து மீது வழக்குப்பதிந்து விசாரித்து வரு கின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு திருவில்லிபுத்தூர், ஜன.9- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குன்னூர் ஆண்டாள் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நல்லம்மை. இவர் திருச்சியில் உள்ள மூத்த மகளுடைய வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அலைபேசி மூலம் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கொடுத்த தகவ லின் அடிப்படையில் நல்லம்மை வீட்டிற்கு வந்து பார்த்தார்.அப்போது வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப் பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. 4 கிராம் தோடு, ஒரு ஜோடி 2 கிராம் மோதிரம் இரண்டு, ரொக்கப்பணம் ரூ.4000 திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலை யத்தில் நல்லம்மை புகார் கொடுத்தார். காவல்துறை யினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.</p>
