நெல் கொள்முதல் தொகை வழங்கவில்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு
25 Mar 2026, 5:29 pm
<p><strong>நெல் கொள்முதல் தொகை வழங்கவில்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு</strong></p>
<p>இராமநாதபுரம், மார்ச் 25- இராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட திருஉத்திரகோச மங்கை அருகே களக்குடி கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்யப் பட்டது. தற்போது வரை இதற்கான தொகை வழங் கப்படவில்லை என விவ சாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, களக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் மு.முருகேசன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப் பட்டது. அந்த மனுவில், “அரசின் நேரடி கொள்முதல் நிலை யம் மூலம் கடந்த 13.2.2026 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 23.3.2026 வரை சுமார் 1,24, 650 நெல் மூட்டைகள் கொள் முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அந்த நெல் விற்பனைக்கான தொகை விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட வில்லை. இதனால், களக்குடி கிரா மத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கடும் பொரு ளாதார சிக்கலில் சிக்கியுள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள நெல் கொள்முதல் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து விசா ரணை நடத்தி தீர்வு காண வேண்டும்” என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.</p>
