தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறைபாடுகளைக் களைய விவசாயிகள் எதிர்பார்ப்பு

27 Dec 2025, 6:08 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறைபாடுகளைக் களைய விவசாயிகள் எதிர்பார்ப்பு
<p><strong>வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறைபாடுகளைக் களைய விவசாயிகள் எதிர்பார்ப்பு&nbsp;</strong></p> <p>அத்திக்கடவு அவிநாசி திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் 60 ஆண்டு காலக் &nbsp;கனவுத் திட்டமாகும். ஒட்டக முதுகு போன்று மேட்டுப்பாங்கான நில அமைப்புக் கொண்ட பகுதிகளில் குளம், குட்டைகளுக்கு நீர் செறி வூட்டுவதே இத்திட்டத்தின் நோக்கம். அடுத் தடுத்து வந்த ஆட்சியாளர்கள் சில முன்முயற்சி களை எடுத்தபோதும், விவசாயிகள், பொது &nbsp;மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவா கவே இத்திட்டம் கிடைத்தது. ரூ.1916 கோடியில் திட்டம் அதன்படி, அத்திக்கடவு - அவினாசி பாசன &nbsp;நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ரூ.1652 கோடி நிதி ஒதுக்கியது. ஆயினும் &nbsp;மொத்த திட்டச் செலவு ரூ.1916 ஆக உயர்ந் தது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று &nbsp;அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அடிக்கல் நாட்டினார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். செயல்படும் முறை இத்திட்டத்தில், பவானி ஆற்றின் உபரிநீர் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ் புறத் தில் இருந்து நீரேற்றம் செய்யப்படுகிறது. மொத் தம் 6 பம்பிங் ஸ்டேஷன் மூலம், மொத்தம் 1065 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி குழாய்கள் மூலம், &nbsp;1.5 டி.எம்.சி. உபரிநீர், வினாடிக்கு 250 கனஅடி &nbsp;வீதம் 70 நாட்களுக்கு நீரேற்றம் செய்யப்படு கிறது. இதில் 3 மாவட்டங்களில் உள்ள 74 குளங் கள், 971 குட்டைகள் என மொத்தம் 1045 நீர் நிலைகள் பயன்பெறும். இதன்மூலம் நிலத் தடி நீர் செறிவூட்டப்பட்டு 24 ஆயிரத்து 468 ஏக்கர் &nbsp;விவசாய நிலம் பயனடையும். &nbsp;குறிப்பாக வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் முறையில் உரு வாக்கி எல்&amp;டி நிறுவனம் இத்திட்டத்தை 60 &nbsp;மாதங்களுக்குப் பராமரிக்கிறது. தமிழகத்தின் முதல் நீரேற்றுத் திட்டமான இதில், ஈரோடு &nbsp;மேற்கு, பெருந்துறை, கோபி, பவானிசாகர், &nbsp;அவினாசி, திருப்பூர் வடக்கு, காங்கேயம், &nbsp;சூலூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளை யம் ஆகிய 10 தொகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 193 மீட்டர் உயரத் தில் உள்ள பவானியில் இருந்து நீரை எடுத்து சுமார் 325 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி குள மான மேட்டுப்பாளையம் பெள்ளாதி குளம் வரையிலும் செயல்படுத்தப்படுகிறது. 100 குளம், குட்டைகளுக்கு நீரேற்றமில்லை நீரேற்று நிலையம் 3,4,5,6 மூலம் குளம், குட்டைகளுக்கு கடந்த 72 நாட்கள் நீரேற் றம் செய்யப்பட்டும், சுமார் 10% குளம், குட்டை களுக்கு நீரேற்ற முடிய வில்லை. தண்ணீர் செல் லும் குழாய்கள் பல கி.மீ., நீளத்திற்கு குறைந்த &nbsp;சுற்று கொள்ளளவு, அதாவது 2 அல்லது 3 இஞ்ச் &nbsp;கனம் மட்டுமே கொண்ட குழாய்கள் போடப் பட்டிருக்கிறது. இதனால் ஆற்றில் இருந்து சுத்த ரிக்கப்படாத நீரோடு சேர்ந்து கற்கள், கூலாங் கட்டிகள் சென்று குறுகிய இந்த குழாயை அடைக்கின்றன. &nbsp;நீர் நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தானி யங்கி சூரியஒளி சக்தியில் இயங்கும் (ஓ.எம். எஸ்.) கட்டுப்பாட்டுக் கருவிகளும் பழுதடைந்து &nbsp;விடுகின்றன. இதனால் கண்காணிப்பில் சிரமம் &nbsp;ஏற்படுகிறது. பணியாளர்கள் நேரடியாகச் சென்று கண்காணிக்க வேண்டிய நிலையில், அந்த குட்டைகளுக்கு நீரேற்றம் செய்ய முடிய வில்லை. தற்போது திட்டத்தைப் பராமரிக்கும் எல்&amp;டி நிறுவனம், ஒப்பந்தப்படி பழுதுகளை சரி &nbsp;செய்து வருகிறது. எனினும் குறிப்பிட்ட குட்டை களுக்கு நீர் ஏற்றம் செய்ய முடியாமலேயே, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1.5 டி.எம்.சி. நீரை &nbsp;72 நாட்கள் ஏற்றம் செய்து விட்டதாக அதி காரிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் 100 &nbsp;குளம், குட்டைகள் திட்டப்படி நீர் நிரப்பப்பட வில்லை. இங்கு நீர் நிரப்புவதற்கு உரிய உத் தரவுகள் நீர்வளத் துறையால் வழங்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு தேவை இத்திட்டத்தில் 6 நீரேற்று நிலையங்களுக்கு மின் கட்டணம் ரூ.72 கோடி வந்துள்ளதாக அதி காரிகள் கூறினர். இதற்கென்று நிதி ஒதுக்கீடு இல்லாததால், அவ்வப்போது அரசிடம் கேட்டு &nbsp;பெறவேண்டிய நிலையும், மின் வாரியத்திற்கு &nbsp;மின்கட்டணம் செலுத்தாத சூழலும் உள்ள தாக நிறுவன அதிகாரிகள் கூறினர். இத்திட்டத்தில் சூரியசக்தி மின் நிலையங் கள் உருவாக்கி, அதன்மூலம் நீரேற்ற மோட்டார் களுக்கு மின் உற்பத்தி செய்வது என்ற திட் டம், இன்னும் நிதி ஒதுக்கி அமலாக்கப்பட வில்லை. எனவே சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை உடனடியாக நிறுவுவதற்கு தமி ழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பராமரிக்க கூட்டுக்குழுக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பின் இத்திட்டத்தை பராமரிப்பது, செலவுகளை ஈடுகட்டுவது தொடர்பாக அரசிடம் தெளிவான திட்டம் இல்லை. அதை உருவாக்க வேண்டும். அத்து டன் நீர்நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தானி யங்கி சூரியஒளி சக்தி கருவிகளைப் பரா மரிக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விவசாயிகளிள் பங்கேற்புடன் கூட் டுக்குழுக்கள் அமைத்துப் பாதுகாக்க வேண் டும். இரண்டாம் கட்டம் வேண்டும் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பதற்கு அவினாசி அத்திக்கடவு திட்டம் &nbsp;இரண்டாம் கட்டம் குறித்து அரசு அறிவிக்க &nbsp;வேண்டும். கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்ள &nbsp;ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் செங்கப் பள்ளிக்கு தெற்கு பகுதி, ஊத்துக்குளி பேரூ ராட்சி மற்றும் ஊராட்சிகள், திருப்பூர் ஒன்றியத் தின் பெருமாநல்லூர் முதல் நல்லாறு வரை இருக்கும் பகுதிகள், அவிநாசி ஒன்றியத்தில் சில பகுதிகள் அத்திக்கடவு திட்டத்தில் இணைக் கப்படாமல் விடுபட்டுள்ளன. இவ்வாறு திட்டப் &nbsp;பகுதிகளில் சுமார் 1000 குளம், குட்டைகள் இணைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே திமுக அரசு புதி தாக அத்திக்கடவு, அவினாசி திட்டத்தில் கட் டம்-2 என்று சொல்லி உடனடியாக புதிய &nbsp;திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கி நிறை வேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிணைய வாரீர் இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;இத்திட்டத்திற்குட்பட்ட அவிநாசி, ஊத்துக் குளி, திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டது. ஞாயி றன்று பெருமாநல்லூரில் கோரிக்கை வலியு றுத்தி சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்படுகி றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் &nbsp;தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் &nbsp;டி.ரவீந்தரன் பங்கேற்று சிறப்புரையாற்றுகின் றனர்,. திரளான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.