தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோழிக்கொண்டை பூவிற்கு போதிய விலையில்லை சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றம்!

7 Dec 2025, 3:52 pm
கோழிக்கொண்டை பூவிற்கு போதிய விலையில்லை சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றம்!
<p><strong>கோழிக்கொண்டை பூவிற்கு போதிய விலையில்லை சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றம்!</strong></p> <p>கோவை மாவட்டத் தில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறி கள், வாழை உள்ளிட்ட &nbsp;பயிர்களை விவசாயி கள் சாகுபடி செய்து வரு கின்றனர். தற்போது கார்த்திகை, மார்கழி சீச னை முன்னிட்டு தொண் டாமுத்தூர் அடுத்த வைதேகி நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதிக ளில் கோழிக்கொண்டை பூக்களை விவசா யிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இம் முறை கோவை மாவட்டத்தில் பருவம் &nbsp;தவறி பெய்து வரும் மழை மற்றும் போதிய விலை இல்லாததால், கோழி கொண்டை பூக்களை சாகுபடி செய்த விவ சாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்தாண்டு இதே சீசனில் ரூ.40 முதல் &nbsp;ரூ.50 வரை விற்பனையான கோழிக் கொண்டை பூக்கள், இந்தாண்டு ரூ.20 &nbsp;முதல் ரூ.25 வரை மட்டுமே விற்பனை யாகி வருகிறது. இந்த விலை வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக ஒசூர், கிருஷ்ணகிரி மாவட் டங்களில் சாகுபடி செய்யப்படும் கோழிக் கொண்டை மலர்கள் அளவில் பெரிதாக வும், நல்ல வண்ணத்துடன் காணப்படுகி றது. இதனால் வியாபாரிகள் அங்கிருந்து &nbsp;பூக்களை வாங்க ஆர்வம் காட்டுகின்ற னர். அதேநேரத்தில் கோவையில் பருவம் &nbsp;தவறி பெய்து வரும் மழை மற்றும் உரம் &nbsp;பிரச்சனையால் பூக்கள் பெரிய அள விற்கோ, அதிக வண்ணமோ இருப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி பொன்னுசாமி கூறுகையில், &ldquo;கடந்த &nbsp;20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரு கிறோம். பருவநிலைக்கு ஏற்ற பயிர் களை சாகுபடி செய்கிறோம். இந்த ஆண்டு கார்த்திகை, மார்கழி ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு பூ சாகுபடி &nbsp;செய்துள்ளோம். இந்த முறை விளைச் சலும் இல்லை, போதிய விலையும் இல்லை. மழை காரணமாக பூக்களில் வண்ணம் மற்றும் அளவு பெரிதாக வரு வதில்லை. அதே போல கோவை சந்தை களுக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள் ளதால் இங்குள்ள பூக்கள் மதிப்பு குறைந் துள்ளது. இந்த சீசன் பூக்கள் சாகுபடி எங்க ளுக்கு சோகம் தான், என்றார். -கவி</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.