மக்காச்சோளத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
28 Dec 2025, 5:05 pm
<p><strong>மக்காச்சோளத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை</strong></p>
<p>உடுமலை, டிச.28- வியாபாரிகளும், கால்நடை தீவன நிறுவனங்களும் சிண்டிகேட் அமைத்து மக்காச்சோளத்திற்கு செயற்கையாக விலை குறைப்பு செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக் கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிரந்தர விலை நிர் ணயம் செய்ய வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். திருப்பூர் மாவட்டத்தில் உடு மலை, மடத்துக்குளம் மற்றும் தாரா புரம் தாலூகா பகுதிகளில் பல்லாயி ரக்கனக்கான ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிடப்படுகிறது. பயிரி டும் போது, நூறு கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2500 வரை விலை இருத்தது. ஆனால், அறுவடை காலமான தற்பொழுது ரூ.2000 முதல் ரூ.2100 வரை மட்டுமே வியா பாரிகள் விலை நிர்ணயம் செய்துள் ளனர். ஒரு ஏக்கர் மக்காசோளம் பயிர் செய்ய உழவு, விதை, உரம், பூச்சிமருந்து மற்றும் அறுவடை என ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. படைப் பூழு தாக்குதலை தடுக்க மேலும் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் கூடுதல் செலவு ஏற்பட்டு, மொத்தமாக ஏக் கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் காரணத்தால் விளைச்சலும் குறைவு ஏற்பட்டு, மக்காச்சோள தட்டுகளையும் விற் பனை செய்ய இயலாத நிலை உள் ளது. தற்சமயம், விவசாயிகளுக்கு புதிய பிரச்சனையாக காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகி றது. இதனால் குறைவான விளைச் சல் ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதி விவசாயிகள் வரு டம் முழுவதும் மக்காச்சோளத்தை அதிகமாக உற்பத்தி செய்வதால், கால்நடைகள் மற்றும் கோழி தீவன நிறுவனங்கள் அதிகள வில் உள்ளன. இந்த நிறுவனங்களு டன் வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து, செயற்கையாக விலை குறைப்பு செய்து விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படுகிறது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிர்ண யம் செய்ய வேண்டும் என்பதே விவ சாயிகளின் கோரிக்கையாக உள் ளது.</p>
