விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும்!
1 hour before
<p><strong>விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும்!</strong></p><p>தஞ்சாவூர், ஜூலை 3 - இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும் என வேளாண்மை நிதி நிலை அறிக்கை கருத்து கேட்பு கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தஞ்சாவூரில், வெள்ளிக்கிழமை வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருச்சி, புதுக் கோட்டை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவ சாயிகள் கலந்து கொண்டு பேசிய தாவது: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாது காப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ள சூழ்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கும் முந்தைய அரசியல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். மேட்டூர் அணையை நம்பி விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதால், இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் 4 லட்சம் விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்க ஏது வாக, ஆண்டுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்க அரசு முன் வர வேண்டும். கல்லணை தலைப்பிலிருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் நீரோட்டத்துக்கு தடையாக இருக் கும் காடுகள், மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய இடுபொருள் கள், இயந்திரங்களின் வாடகை உயர்வு, ரசாயன உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு அனைத்தையும் கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை ரத்து செய்வதாக அறிவித்து, பல்வேறு நிபந்தனை களை விதித்துள்ளது. அந்த நிபந்த னைகளின்படி செயல்பட்டால் அரசு புள்ளி விவரத்தின்படி விவசாயி களுக்கு பயன் கிடைக்காது. விவசா யிகள் முழு பயன்பெற அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி திட்டத்தின் அர சாணையின்படி பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்ய பட்ஜெட்டில் அறி விக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணைக் கால்வாயில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைத்ததின் நிலத்தடி நீர், தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் 20 அடியிலிருந்து தற்போது 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனை சரி செய்ய கல்லணை கால் வாயில் 300 அடிக்கு ஒரு இடத்தில் நீர் செறிவூட்டும் குழாய் அமைக்க வேண்டும். டெல்டா மாவட்டங் களில் நெல் அறுவடை இயந்தி ரங்கள் அதிகளவில் விவசாயி களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். நெல் மூட்டைகளை சேமிக்க டெல்டாவில் மேலும், பல இடங்களில் சேமிப்பு கிடங்குகளை கட்டமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் நெல்லின் ஈரப்பதத்தை கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு 22% வரை கொள்முதல் செய்ய வேண்டும். பெரும்பாலான கொள்முதல் நிலை யங்களில், உழவர்கள் தங்கள் வயல்களில் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை பாதுகாக்க தார்பாய்கள் வழங்கப் படுவதில்லை. ஆகையால், கொள் முதல் நிலையங்களில் கூடுதலாக தார்பாய்கள் வழங்க வேண்டும். காவிரிப் பிரச்சனையை சட்டரீதி யாகவும், அரசியலாகவும் முன்னெ டுக்க தனி பிரிவு(war room) துவங்க வேண்டும். தனியார் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. எனவே அரசே பயிர் காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். சிறப்பு தூர்வா ரும் பணிக்கு கூடுதல் நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசி னர்.</p>
