தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

13 Nov 2025, 3:30 pm
திருச்சி விரைவு செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, நவ.13- தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவ தற்காகவும், திரும்ப பெறுவதற்காக வும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது 01-01-2026 ஐ தகுதிநாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் விநி யோகம் செய்யும் பணி 04-11-2025 அன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-11-2025 மாலை 4 மணியளவில் 70 சதவிகிதம் கணக்கெடுப்பு படிவங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.  இப்பணியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1627 வாக்குச்சாவடி நிலை அலுவலர்க ளும், 166 வாக்குச்சாவடி நிலை மேற் பார்வையாளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 15 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் பணிபுரிந்து வரு கின்றனர். இந்த கணக்கெடுப்பு படி வங்கள் விநியோகம் செய்வதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் அன்றி பிற நபர்கள் மூலம் கணக்கெடுப்பு படிவங்களை விநி யோகம் செய்யகூடாது எனவும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  மேலும், கணக்கெடுப்பு படிவங்க ளை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறு வதற்காகவும், தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவ டிகளிலும், வரும் 15-11-2025 (சனிக்கிழ மை) மற்றும் 22-11-2025 (சனிக் கிழமை) ஆகிய தினங்களில் இரு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், இணையவழியாகவும், வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை பதிவேற்றும் வசதி உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் களப்பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களு க்கு, வாக்காளர்கள் உரிய ஒத்து ழைப்பு நல்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கவின் ஆணவப் படுகொலை வழக்கு: துணை ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு சிபிசிஐடி பதில் தர நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி, நவ.13- கவின் ஆணவ படுகொலை வழக்கில், சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் கோரிய மனுவிற்கு சிபி சிஐடி தரப்பில் பதிலளிக்குமாறு  உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின், கடந்த ஜூலை 27ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் வைத்து காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதில் காதலியின் தம்பி சுர்ஜித், அவரது தந்தையான காவல்  துணை ஆய்வா ளர் சரவணன், உறவினர் ஜெயபால் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர், இதில் கைது செய் யப்பட்டு சிறை யில் இருக்கும் சுர்ஜித் தின் தந்தை  சரவணனின் ஜாமீன் மனு ஏற்கனவே நெல்லை நீதிமன்றத்தில் தள்ளுபடியா னது. இந்நிலை யில் தனக்கு ஜாமீன் கோரி சரவணன், உயர் நீதிமன்ற  மதுரை கிளை யில் மனு செய்தார். அதில், ‘சம் பவம் நிகழ்ந்த போது, நான் ராஜபாளையத்தில் பணியில் இருந் தேன். சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் எனது ஜாமீன் மனு ஏற்கன வே தள்ளுப டியாகியுள்ளது. 98 நாட் களுக்கு மேலாக சிறையில் இருக்கி றேன்.எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறியிருந் தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளி சங்கர், மனுவிற்கு சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யு மாறு உத்தரவிட்டார்.

வானிலை எச்சரிக்கை: மீனவர்கள்  கடலுக்குச் செல்ல தடை

தூத்துக்குடி, நவ.13- கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கட லுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் உருவாகி யுள்ளது. மிக கனமழை பெய்யும் என்றும் கடல் பகுதி யில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத் தில் உ்ளள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அதில் அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

இயற்கை உரம் பதுக்கல்: கிடங்குக்கு அதிகாரிகள் சீல்

தூத்துக்குடி, நவ.13- கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேளாண்மை உதவி இயக்குனர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) நாகராஜன் (ராமநாதபுரம்), ஆதிநாதன் (தென்காசி) கண்ணன் (தூத்துக்குடி) கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன், வேளாண்மை துறை அதிகாரிகள் காயத்ரி, நரேஷ் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிடங்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த கி்டங்கு விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த  பொன்னுச்சாமி  என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. விருதுநகரில் உள்ள இயற்கை உர கடையில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த இயற்கை உரங்கள் (biostimulant) ஊத்துப்பட்டியில் உள்ள கிடங்கில் வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்து இருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின் படி சட்டவிரோதம் என்பதால் கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகளை சுடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி, நவ.13- களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. வனசரகர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வனவர் மதன்குமார் வரவேற்றார்.  கூட்டத்தில்   தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் பெரும்படையார்  பேசுகையில், வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அவை ஊருக்குள் வராமல் தடுக்க வேலி, அகழி அமைத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும். காட்டு பன்றிகளை சுட அனுமதித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனவே பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை சுடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். பன்றிகளை சுட அமைக்கப்பட்டுள்ள குழுவில் அந்தந்த பகுதி விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்றார். இதில் வனவர் அருணா, வனத்துறை ஊழியர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.