கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான பணத்தை உடனே வழங்க விவசாயிகள் கோரிக்கை
28 Nov 2025, 2:28 pm
<p><strong>கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான பணத்தை உடனே வழங்க விவசாயிகள் கோரிக்கை</strong></p>
<p>திருவண்ணாமலை,நவ. 28- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் அலங்காரமங்கலம் கிராமத்தில் உற்பத்தி யாளர்களிட மிருந்து, கூட்டுறவு சங்கம் சார்பில் பாலை கொள்முதல் செய்து, அருகில் உள்ள பாடகம் பிஎம்சிக்கு தினசரி அனுப்பி வைக்கின்றனர். அலங்காரமங்கலம் கிராமத்தில் உற்பத்தியாகும் பாலை பாடகம் பிஎம்சிக்கு கொண்டு வருவதில் நடை முறை சிக்கல் நீடிக்கிறது. கொள்முதல் செய்த பாலை கொண்டு வருவதற்கு வாகன வசதி இல்லாமை, பால் தரம், எடை ஆகிய வற்றில் வித்தியாசம் போன்ற காரணங்களால் அலங்காரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இதுநாள் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான பணம் பட்டுவாடா செய்யப்பட வில்லை. எனவே, பாலுக்கான பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்கள் தனியார் மையம் நோக்கி செல்வதை தடுக்கும் விதமாக, பால் உற்பத்தியை பாதுகாக்க கூட்டுறவுத்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அலங்காரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள், வேங்கிக்கால் ஆவின் கூட்டுறவு மண்டல பொது மேலாளரிடம் வெள்ளிக் கிழமை அன்று(நவ.28) கோரிக்கை மனு அளித்த னர். மனுவைப் பெற்றுக் கொண்ட பொது மேலாளர் மிக விரைவில் பணம் பட்டு வாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார். உடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி இல. அழகேசன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகையன், அலங்கார மங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் சாமிக்கண்ணு உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.</p>
