முந்தய பக்கம்

அமராவதி அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

3 Feb 2026, 4:00 pm
அமராவதி அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
<p><strong>அமராவதி அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை</strong></p> <p>உடுமலை,பிப்.3- அமாரவதி அணையை தூர்வார பொது பணித்துறை நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும். மேலும் அணையில் எடுக் கும் வண்டல் மண்களை விவசாயிக ளுக்கு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். &nbsp;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யில் அணை கட்டப்பட்டுள்ளது. அமரா வதி அணையில் இருந்து பல லட்சக்கணக் காண விவசாய நிலங்களுக்கும், சில &nbsp;மாவட்ட &nbsp;மக்களின் குடிநீர் தேவையை &nbsp;பூர்த்தி செய்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளவு நீர் தேக்கத்தில் பெரும் அளவிற்கு வண்டல் மண் மேடாக இருந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் அதிமான நீர் &nbsp;தேக்க முடியாமல் சேமிக்க வேண்டிய &nbsp;நீரை ஆற்றுப் பகுதியில் திறக்க வேண் டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. மழை &nbsp;காலங்களில் நீரை சேமிக்கும் வகையில் &nbsp;அமராவதி அணையை தூர்வார வேண் டும். மேலும் தூர்வரும் வண்டல் மண் களை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தற்பொழுது அணையில் மொத்த கொள்ளவான 90 அடியில் 62 அடி மட் டுமே நீர் உள்ளது. மேலும் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையில் லாத காரணத்தால் நீர் வரத்து 31 கன அடி யாக மிகவும் குறைவாக உள்ளதால் அணையின் நீர் வரத்து பகுதியில் இருந்து மண் எடுத்தால் அணை நீர் கொள்ளவு அதிமாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram