தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்

23 Jul 2026, 11:44 pm
வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்
<p><strong>வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>உடுமலை, ஜூலை 23- காட்டுப்பன்றிகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.10 இலட்சம் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உடுமலை வட்டம் சின்னவளவாடி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி கடந்த 13-ஆம் தேதி பெரியகுளம் பிரிவு பகுதியில் காட்டுப்பன்றி மோதிய விபத் தில் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் கடந்த 17-ஆம் தேதி மரணமடைந்தார்; அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், தளி பேரூராட்சி சாம்பல்மேடு பகுதியைச் சேர்ந்த பாபு (52) என்பவர் திரு மூர்த்தி அணை அருகில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயம டைந்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 16 ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு அரசு வழங்கும் ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை யும், படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவச் செலவு ஈட்டுத்தொகையையும் விரைவில் வழங்கக்கோரி மாவட்ட வன அலுவலர் ராஜேஷிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் புதனன்று மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வன அலுவலர், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், விரை வாக நிவாரணம் வழங்கப்படுவதுடன், காயமடைந்தவர்க ளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிய ளித்தார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதணன், உடுமலை ஒன்றியநிர்வாகிகள் பாலதண்டபாணி, ராஜகோபால், பரம சிவம், வாளவாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் தேவராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.