தொடர்மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
24 Nov 2025, 3:26 pm
<p><strong>தொடர்மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை</strong></p>
<p>பாபநாசம், நவ.24- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாப்பேட்டை அருகே, பல்லவராயன் பேட்டையில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. நீரில் மூழ்கிய வயலில், அழுகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டி விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் திருநாவுக்கரசு, ராமச்சந்திரன், வெங்கடேசன் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர். இதில் வடிகால் வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும். வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நீரில் மூழ்கிய வயலை ஆய்வு செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழங்கினர். </p>
