பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய அரசு தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் கண்டனம்!
yesterday

பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய அரசு

தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் கண்டனம்!

சென்னை, ஆக. 22:வேளாண் கடன் தள்ளுபடியில் தவெக அரசு மூன்றாவது முறையும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்கள் பி.எஸ். மாசிலாமணி மற்றும் சாமி. நடராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர்களின் வாக்குறுதியும் தொடர் ஏமாற்றமும்தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி கடந்த மூன்று மாதங்களாகவிவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதிசென்னையில் 11 சங்கங்கள் இணைந்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கின. அன்றைய தினம் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியபோது, விவசாய சங்கத்தலைவர்களுடன் மீண்டும் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்ததை ஏற்றுப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி எட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், கடன் தள்ளுபடியின் அவசியத்தை விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. முதல்வரிடம் பேசி உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்ததை நம்பி அனைத்துப் போராட்டங்களும் கைவிடப்பட்டன.

ஆனால், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு, அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக உள்ளதாகவும், இது விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கோரிக்கைகளும் எச்சரிக்கையும்விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மகசூல் இழப்பு, இயற்கைப் பாதிப்புகள் மற்றும் உற்பத்திச் செலவுஅதிகரிப்பு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாத சூழலில், விவசாயிகள் தங்களது எதிர்பார்ப்புகளை அமைச்சர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தனர். ஆனால் நிதி நெருக்கடியைக் கூறிவிட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ள கடன் தள்ளுபடி அளவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அமைச்சர்கள் விவசாய சங்கத் தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில்,தவெக அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். விவசாயிகளின் தற்போதைய துயரங்களைஉணர்ந்து, கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுஉள்ளது.