ஏக்கருக்கு ரூ.35ஆயிரம் நிவாரணம் கேட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்
11 Dec 2025, 3:52 pm
<p><strong>ஏக்கருக்கு ரூ.35ஆயிரம் நிவாரணம் கேட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்</strong></p>
<p>திருவாரூர், டிச.11- வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக, தொடர்மழை பாதிப்பில் மறு சாகுபடிக்கு வழியில்லாத ஒருவருட வருமானத்தை இழந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்கிட வேண்டும். நிலம் மற்றும் பயிர் டிஜிட்டல் சர்வே எடுப்பதை கைவிட்டு, பயிர் பாதிப்பை மட்டுமே கணக்கிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நன்னிலம் நன்னிலம் ஒன்றியம் கொல்லூ மாங்குடி கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லச் செயலாளர் சாமி.நடராஜன் கோரி க்கையை விளக்கி உரையாற்றினார். மறியல் போராட்டத்திற்கு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வரத.வசந்தராஜன் தலைமை ஏற்றார். மாநிலக் குழு உறுப்பினர் க. தமிழ்செல்வி, ஒன்றியச் செயலாளர் எம். ராமமூர்த்தி, பொருளாளர் எஸ். தங்க ராசு உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகி கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மேம்பாலம் ரவுண்டா னாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், துணைத் தலைவர் டி. தியாகராஜன் ஆகியோர் கோரிக்கை விளக்கிப் பேசி னர். மறியலில் ஒன்றியச் செயலாளர்கள் ஜி. பவுன்ராஜ், கே. புலிகேசி, ஆர்.எஸ். சுந்தரய்யா, எஸ். சௌரிராஜன், என். ராஜசேகர், கே. பாலதண்டாயுதம் மற்றும் இரு அமைப்பின் ஒன்றிய, நகர நிர்வாகிகள், விவசாயிகள் சாலை மறியலில் கலந்து கொண்டனர். குடவாசல் குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ். கிருஷ்வநாதன், ஆர். பிரபாகரன், நகரச் செயலாளர் டி.ஏ. சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். அமைப்பின் முன் னாள் மாநிலச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் கே. ராவணன் கோரிக்கையை விளக்கி பேசினார்கள், சாலை மறியலில் இரு அமைப்பின் நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான் வலங்கைமான் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே. சுப்பிரமணியன், பி. சின்னராஜ், ஒன்றி யத் தலைவர்கள் எஸ். இளங்கோவன், எம்.கலியபெருமாள் ஆகியோர் தலை மை வகித்தனர். அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். கொரடாச்சேரி ஒன்றியம் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலை வர் ஐ. நந்தன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் கே. கோபிராஜ் மற்றும் தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.பக்கிரிசாமி, தலைவர் பி.கே.டி. சந்தி ரன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மாவட்டப் பொருளாளர் வி.எஸ். கலியபெருமாள் மற்றும் பலர் மறியலில் கலந்து கொண்டனர். </p>
