நிலத்திற்கு இழப்பீடு வழங்காத அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>நிலத்திற்கு இழப்பீடு வழங்காத அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்</strong></p>
<p>நாமக்கல், பிப்.17- ரிங் ரோடு அமைக்கும் பணிக் காக கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் பணி களை தொடங்கிய அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு நகரப் பகுதியில் ஏற்ப டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருச்செங் கோடு நகரை சுற்றி சுற்றுவட்ட சாலை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சுற்றுவட்ட சாலைக்கு நிலம் எடுக்கும் பணி நடைபெற்றது. ஆனாலும் பல இடங்களில் பிரச் சனைகள் இருந்து வந்த நிலையில் ரிங் ரோடு அமைக்கும் பணி முழுமை பெறாமல் காலதாமத மாகி வந்தது. இந்நிலையில் குப்பாண்டா பாளையம் கிராமம் ஒடுவம்பாளை யம் பகுதியில் தங்கவேலு என்ற விவசாயிக்கு சொந்தமான சர்வே எண் 71/1 இல் உள்ள 4 ஏக்கரில் 600க்கும் மேற்பட்ட செம்மரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகி றது. இந்த விவசாய நிலத்தின் வழி யாக நூறு அடி அகலம் 380 மீட்டர் நீளத்தில் சாலை போடுவதற்காக நிலம் எடுக்கும் பணி துவங்கியது. தனது நிலத்தில் செம்மரம் வைத் துள்ளதால் இதற்கு வழக்கமாக தென்னை, கொய்யா, முருங்கை போன்ற மரங்களுக்கு கொடுக்கும் இழப்பீடை கொடுக்காமல் அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தங்கவேலு கேட்டுக் கொண்டார் நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், இவர் உயர்நீதி மன்றத்தை நாடி அவரது நிலத்தில் சாலை போடுவதற்கு தடை உத்தரவு பெற் றார். எட்டு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இவ ரது நிலம் உள்ள பகுதியில் இன்னும் சாலை பணிகள் நடைபெறாமல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையி னர் செம்மரத்திற்கு நாங்கள் மதிப் பீடு போட முடியாது என்றும் வனத் துறை தான் மதிப்பீடு செய்ய வேண் டும் என்றும் அலைகழித்து வரு கின்றனர். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்சனை இழுபறியாக உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று இந்த நிலத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக இயந்திரங்களு டன் நெடுஞ்சாலை துறை ஏடி பொறுப்பு முருகேசன் என்பவர் தலைமையில் அதிகாரிகள் வந்த னர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தங்கவேல் மற்றும் அவரது உறவினர்கள் சாலை அமைப்பதற் கும் மரங்களை எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங் கள் நிலத்திற்கு உரிய இழப்பீட்டை கொடுத்துவிட்டு அதன் பின் சாலை அமைக்கும் பணியை தொடர வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இதனால் இருதரப்பினர் இடையே கடுமை யான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு மணி நேரம் நடைபெற்ற வாக்குவாதத்தின் இறுதியில் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தால் ஒடுவம் பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
