விவசாயிகள் சங்க சுல்தான்பேட்டை ஒன்றிய மாநாடு
yesterday
<p><strong>விவசாயிகள் சங்க சுல்தான்பேட்டை ஒன்றிய மாநாடு</strong></p><p>கோவை, ஜூன் 21– விவசாயிகள் சங்க சுல்தான் பேட்டை ஒன்றிய மாநாட்டில், நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றிய 5 ஆவது மாநாடு, நகர களந்தை பகுதியில் கே.சென்னியப்பன் தலை மையில் சனியன்று நடைபெற்றது. சங் கத்தின் கொடியை சி.மந்திரியப் பன் ஏற்றி வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி. இளங்கோவன் துவக்கவுரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் சி.சபரிஸ் வரன், பொருளாளர் ஏ.சக்திவேல் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்த னர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந்திரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ரவீந்திரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட் டில், தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதி யின்படி, விவசாயக் கடன்கள் முழு வதையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனைமலை - நல் லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். பொது விநியோகத் திட்டத் தின் கீழ் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலை வராக கே.சென்னியப்பன், செயலாள ராக சி.சபரிஸ்வரன், பொருளாள ராக எஸ்.தாமோதரசாமி, துணைத் தலைவராக சி.மந்திரியப்பன், துணைச் செயலாளராக ஏ.சக்திவேல் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப் பட்டது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி நிறை வுரையாற்றினார். கணேசன் நன்றி கூறி னார்.</p>
