தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க போராட்டம் ஒத்திவைப்பு: சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் உறுதி

3 Jun 2026, 12:29 am
விவசாயிகள் சங்க போராட்டம் ஒத்திவைப்பு:  சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் உறுதி
<p><strong>விவசாயிகள் சங்க போராட்டம் ஒத்திவைப்பு: சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் உறுதி</strong></p><p>​​​​​​​திருவள்ளூர், ஜூன் 2- கும்மிடிப்பூண்டி அருகே சாலைகளை விரைவில் சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் ஜூன் 3 அன்று நடைபெற இருந்த போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தூர் நத்தம் கிராமத்திற்கான 1.5 கி.மீ ஒன்றிய சாலை கடந்த 23 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து கடந்த 2025 அக்டோப ரில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத தால், நவம்பரில் விவசாயிகள் சங்கம் சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது வந்த கும்மிடிப்பூண்டி பிடிஓ சந்திரசேகர் மற்றும் வனத்துறையினர், 2 மாதங்களில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது. இதேபோல், சூரப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பணத்துமேடு கண்டிகையில் தார்சாலை அமைக்கப் பள்ளம் தோண்டப் பட்டு 8 மாதங்களாகியும் பணிகள் முடிக் கப்படவில்லை. இதனால் விபத்துகள் தொட ர்வதால், அதிகாரிகள் மீது தவெக ஆட்சியி லாவது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தியும் ஜூன் 3 அன்று கும்மிடிப்பூண்டி பிடிஓ அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவ சாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் ஜூன் 2 அன்று பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த் தையில், சித்தூர் நத்தம் சாலையை ஒரு மாதத்திலும், பணத்துமேடு கண்டிகைச் சாலையை ஒரு வாரத்திலும் சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. இப்பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டத் தலைவர் சி.முனிரத்தினம், பொரு ளாளர் வி.ராணி, துணைச் செயலாளர்கள் ஏ.ரவி, மகேஷ்குமார் மற்றும் சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.