விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
22 Sept 2026, 11:14 pm

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.22-பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதியில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குமாரபாளையத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை, நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபன் என்பவர்,திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையங்களில்பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதையடுத்து கோவை சரக ஐஜி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையிலும், சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியக்குழு சார்பில், குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் எம்.தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெருமாள், வழக்கறிஞர் என்.கார்த்திகேயன், இ.கோவிந்தராஜ், ஆர்.ரவி உள்ளிட்டோர் உட்பட பலர்கலந்து கொண்டனர்.