முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாடு

13 Jul 2026, 12:28 am
விவசாயிகள் சங்க மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாடு
<p><strong>விவசாயிகள் சங்க மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாடு</strong></p><p>நாமக்கல், ஜூலை 12- விவசாயிகள் சங்க மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய 3 ஆவது மாநாடு, பாலமேடு ஆத்துமேடு அருகே ஞாயிறன்று நடை பெற்றது. ஒன்றியத் தலைவர் எல்.பி. மனோகரன் தலைமை வகித்தார். சங்கத் தின் கொடியை மாவட்ட துணைத்தலை வர் கே.பூபதி ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வேலாயுதம் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கே.செல்வம் அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.ஜோதி, மாவட்டக்குழு உறுப்பி னர் பி.தங்கரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் விவ சாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழு வதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ராமாபுரம், அண்ணமார் நகர் மற்றும் அனைத்து பகுதி மக்களுக்கும் காவேரி குடிநீர் சீராக வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக எம்.கிருஷ்ணன், செயலாளராக எல்.பி.மனோகரன், பொருளாளராக எம்.செங்கோடன் உட் பட 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் நிறைவுரையாற்றினார். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.செங் கோடன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram