முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க நிர்வாகி பி. விஜயகுமார் மறைவு அரசியல் கட்சியினர் அஞ்சலி

13 May 2026, 11:46 pm
விவசாயிகள் சங்க நிர்வாகி   பி. விஜயகுமார் மறைவு  அரசியல் கட்சியினர் அஞ்சலி
<p><strong>விவசாயிகள் சங்க நிர்வாகி பி. விஜயகுமார் மறைவு அரசியல் கட்சியினர் அஞ்சலி</strong> </p><p>கிருஷ்ணகிரி, மே 13- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சூளகிரி வட்டத் துணைச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சூளகிரி வட்டக் குழு உறுப்பினருமான பி. விஜயகுமார், உடல்நலக் குறைவு காரணமாக லாலிக்கல் கிராமத்தில் செவ்வாயன்று (மே 12) காலமானார். அவரது உடல் இன்று (13.05.2026) லாலிக்கல் கிரா மத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேஷ் மற்றும் மாவட்டப் பொருளாளர் எம்.எம். ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வில், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சி. பிரகாஷ், நிர்வாகிகள் அனுமப்பா, குண்டப்பா, ராஜா ரெட்டி, குமாரவடிவேல், தேவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி. சுரேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். சேகர், ஆர். நடராஜன், சூளகிரி வட்டச் செயலாளர் முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ராஜா, இருதயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மறைந்த விஜய குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram