விவசாயிகள் சங்க கோபிசெட்டிபாளையம் தாலுகா மாநாடு
yesterday
<p><strong>விவசாயிகள் சங்க கோபிசெட்டிபாளையம் தாலுகா மாநாடு</strong></p><p>கோபி, ஜூன் 22- விவசாயிகள் சங்கத்தின் கோபிசெட்டிபாளையம் தாலுகா மாநாட்டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா 13 ஆவது மாநாடு ஞாயி றன்று தாலுகா தலைவர் வி.கே.கதிர்வேல் தலைமையில் ஜோதிபாசு நினைவகத்தில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சிவக்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். தாலுகா செயலாளர் கே.ரத்தினம் அறிக்கையை முன் வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு சிறப்புரையாற்றினார். இம் மாநாட்டில், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்கடனை முழமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் நம்பியூர் வட்டாரத்தில் உள்ள உருமம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு குட்டைகளுக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக பி.வெங்கடசாமி, செயலாளராக கே.ரத்தனம், பொருளாள ராக கே.எம்.பழனிச்சாமி, துணைத்தலைவராக ஈ.சுப்பிரமணி யம், துணைச்செயலாளராக கதிர்வேல் உட்பட 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடிவில், துணைத் தலைவர் எஸ்.ஆர்.துரைராஜ் நன்றி கூறினார்.</p>
