தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நார்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

30 Dec 2025, 5:57 pm
நார்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
<p><strong>நார்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை</strong></p> <p>உடுமலை, டிச.30- தென்னை நார்கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் உள்ளதால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாயன்று உடுமலை வரு வாய் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் மடத்துக்குளம் தாலூகா, மைவாடி ஊராட்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட தேங்காய் மட்டை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை யின் நார்கழிவுகளை எவ்வித சட்டவிதிகளை யும் பின்பற்றாமல் விவசாய நிலங்களில் கொட்டி தண்ணீர் விடுவதால் அருகில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றின் தண்ணீர் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் தென்னை நார் கழிவுகளை அரசுக்கு சொந்தமான நீர் ஓடை களில் கொட்டிவிடுகிறார்கள். இதனால் ஓடை யில் செல்லும் தண்ணீர் அமராவதி ஆற்றில் &nbsp;கலக்கும் போது ஆற்றுத் தண்ணீரின் தரம் &nbsp;பாதிக்கப்படும் ஆபாயம் உள்ளது. மேலும் விவசாயப் பயன்பாட்டிற்கு என்று இந்து சமய &nbsp;அறநிலைத்துறையால் வாடகைக்கு விடப் பட்ட கோவில் நிலங்களில் கழிவுகள் போடப் பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக் கும் வகையில் செயல்படும் தென்னை நார் தொழிற்சாலைகள் மீது மாசுகாட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாச்சியர் குமாரிடம் மனு தரப்பட்டது. முன்னதாக, சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம், செய லாளர் வீரப்பன், நிர்வாகிகள் கணேஷ், போஸ், கணபதி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.