தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

17 Jul 2026, 11:59 pm
விவசாயக் கடன்களை முழுமையாகத்  தள்ளுபடி செய்ய வேண்டும்  விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்
<p><strong>விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்</strong></p><p>விழுப்புரம், ஜூலை 17- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 25-வது வட்ட மாநாடு, வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது. மாவட்டப் பொரு ளாளர் பி.சிவராமன் மாநாட்டைத் தொடங்கி வைக்க, மாவட்டத் துணைத் தலைவர் ஏ.நாகராஜன், மூத்த உறுப்பினர் பி.உதயகுமார் மற்றும் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன் உரையாற்றி மாநாட்டை நிறைவு செய்தார். இந்த மாநாட்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமை யாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், உரம் மற்றும் விதை விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தர வாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கண்டாச்சிபுரத்தில் நிரந்தர ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் நிரந்தர இடவசதியுடன் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்சார வசதி யுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு வட்டத்தலைவராக எம்.ராமலிங்கம், செயலாளராக எம்.விமல், பொருளாராக ஏ.முருகானந்தம் உள்ளிட்ட 19 பேர் கொண்ட வட்டக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்துகொண்ட விவசாயி களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.