கோயில் விவசாய நிலத்தை தொழில் தொடங்க தரக்கூடாது விவசாயிகள் சங்க ஆண்டு பேரவை கோரிக்கை
24 Nov 2025, 3:26 pm
<p><strong>கோயில் விவசாய நிலத்தை தொழில் தொடங்க தரக்கூடாது விவசாயிகள் சங்க ஆண்டு பேரவை கோரிக்கை</strong></p>
<p>சென்னை, நவ. 24 - திருநீர்மலை கோயில் விவசாய நிலத்தை தொழில் தொடங்க விடப்பட்ட குத்த கையை ரத்து செய்ய வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் நிலங்கள் பயிரிடுவோர் விவசாயிகள் சங்க ஆண்டு பேரவை ஞாயிறன்று (நவ.23) திருநீர்மலையில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் காலம் கலமாக விவ சாயம் செய்து வரும் கடந்த 4 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ள வரியை வசூலிக்க வேண்டும். விவசாய நிலத்தை தனியார் முதலாளிகள் இருவருக்கு விடுப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலத்தை விவசாயிகளுக்கு மட்டுமே குத்தகைக்கு வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றவேண்டும். திருநீர்மலை பெரிய ஏரியை தூர்வாரி, மதகுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, உபரிநீர் வெளியேறும் களங்களை மீண்டும் கட்டமைக்க வேண்டும். ஏரி வரத்து கால்வாய் மற்றும் துணைக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவர் இ.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில், தமிழ்நாடு அடிமனைப் பயனாளி கள், குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்கத் தின் மாநிலத்தலைவர் வ.செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.நடராஜன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், சங்கத்தின் செயலாளர் டி.எம்.நீர்வண்ணன், பொருளாளர் டி.எம்.சாலமன் உள்ளிட் டோர் பேசினர்.</p>
