தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மீண்டும் தொடங்கிய ரிங் ரோடு பணி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது

28 Dec 2025, 5:05 pm
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மீண்டும் தொடங்கிய ரிங் ரோடு பணி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது
<p><strong>விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மீண்டும் தொடங்கிய ரிங் ரோடு பணி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது</strong></p> <p>திண்டுக்கல், டிச.28- திண்டுக்கல்லில் விவ சாயிகளுக்கு உரிய இழப் பீடு வழங்காமல் ரிங் ரோடு அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடு பட்ட 5 விவசாயிகளை போலீ சார் கைது செய்தனர். இத னைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் &nbsp;நிலமெடுக்கும் நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல்லில் தாம ரைப்பாடியிலிருந்து செட்டி யபட்டி வரை ரிங் ரோடு &nbsp;அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு பாகுபாடு டன் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். இதனையடுத்து, திண் டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து போராட்டக்குழு சார்பில் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப் பட்டன. நிலத்திற்கான மறு மதிப்பீடு முடிவடையும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், ஜனவரி மாதத்தில் முதல்வர் வருகை யை முன்னிட்டு, விவசாயி களுக்கு எந்த இழப்பீடும் &nbsp;வழங்காமல், ஒப்பந்தகா ரர்கள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் நிலமெடுக்கும் அதிகாரிகள், காவல்துறை யின் பாதுகாப்புடன் காப்பி லியபட்டி அருகே சாலை அமைக்கும் பணியை சனிக் கிழமையன்று மீண்டும் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த 5 விவசாயிகளை வட மதுரை போலீசார் கைது &nbsp;செய்தனர். இதற்கிடையே போராட்ட ஒருங்கிணைப்பா ளர்களில் ஒருவரான சரத் &nbsp;குமார் மற்றும் அப்பகுதி விவ சாயிகள் பணிகள் நடைபெறு வதை பார்வையிட சென்ற போது, போலீசார் அவர் களை தடுத்து நிறுத்தினர். &ldquo;நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது எவ்வாறு பணிகளை &nbsp;தொடரலாம்?&rdquo; என சரத் &nbsp;குமார் கேள்வி எழுப்பிய தற்கு, &ldquo;நீதிமன்றத்தின் தடை &nbsp;உத்தரவு இருந்தால் காட் டுங்கள்&rdquo; என போலீஸ் அதி காரிகள் தெரிவித்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் பேரில் பணிகள் நடை பெறுவதாகவும், தாங்கள் பாதுகாப்பு பணிக்காக வந் துள்ளதாகவும் போலீசார் விளக்கமளித்தனர். அந்தப் &nbsp;பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பது போல பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சரத்குமார் மற்றும் விவசாயி கள் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள &nbsp;நிலமெடுக்கும் நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் &nbsp;டத்திற்கு சரத்குமார் தலை மை வகித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.