தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்செங்கோடு விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்

20 Feb 2026, 2:39 pm
திருச்செங்கோடு விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்
<p><strong>திருச்செங்கோடு விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்</strong></p> <p>நாமக்கல், பிப்.20- தகவல் அறியும் உரிமை சட்டத் தில் உரிய விளக்கங்கள் அளிக் கப்படுவதில்லை என விவசாயி கள், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் தெரி வித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு ஊராட்சி ஒன் றிய கூட்ட அரங்கில், திருச்செங் கோடு வருவாய் கோட்டத்திற் குட்பட்ட திருச்செங்கோடு, பரமத்தி &nbsp;வேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதிகளுக்கான விவசாயி கள் குறைதீர் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமை &nbsp;ஏற்றார். இக்கூட்டத்தில் பேசிய &nbsp;விவசாயி தங்கவேல் என்பவர், &nbsp;&ldquo;எனது நிலத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித முன்னறிவிப்பு மின்றி இயந்திரங்களுடன் வந்து சாலை அமைக்க முயல்கின்றனர். அந்த நிலத்தில் உள்ள செம் மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும், நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலை யில், தக்க இழப்பீடு வழங்காமல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது&rdquo; எனப் புகார் தெரிவித் தார். பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பேசுகை யில், தகவல் அறியும் உரிமைச் &nbsp;சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு வருவாய்த்துறை யினர் முறையான பதில் அளிப்ப தில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த கோட்டாட்சி யர் லெனின், &ldquo;தகவல்கள் இருந் தால் மட்டுமே வழங்க முடியும், இல்லையெனில் இல்லை என்று தான் கூற முடியும்&rdquo; என்றார். அதி காரியின் இந்தப் பதிலால் அதிருப்தி யடைந்த விவசாயிகள், கோட்டாட் சியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்ட அரங் கில் சிறிது நேரம் பதற்றமான சூழல் &nbsp;நிலவியது. மேலும், நிலம் அளப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே &nbsp;கட்டணம் செலுத்தியும், இதுவரை &nbsp;சர்வேயர்கள் வந்து அளவீடு செய்ய வில்லை. இது குறித்து வட்டாட்சியர் &nbsp;எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம், உணவு பாதுகாப்புத் துறை &nbsp;உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதி காரிகள் கூட்டத்திற்கு வருவ தில்லை. அவ்வாறு கூட்டத்தைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது &nbsp;கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அடுக்கடுக்கான புகார் களை தெரிவித்தனர். விவசாயிகளின் அனைத்துப் புகார்களையும் கேட்டறிந்த வரு வாய் கோட்டாட்சியர் லெனின், &ldquo;விவசாயிகள் கேட்கும் தகவல் கள் ஒரு அலுவலகத்தில் இல்லை யென்றால், அந்த ஆவணங்கள் எங்கு உள்ளது என்பதை தேடிப் &nbsp;பிடித்து அவர்களுக்கு எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்&rdquo; என வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத் தரவிட்டார். மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை &nbsp;நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.