தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சரபங்கா நதியை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

8 Dec 2025, 4:39 pm
சரபங்கா நதியை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!
<p><strong>சரபங்கா நதியை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!</strong></p> <p>- எழில் - &nbsp;சேலம், டிச.8- ஓமலூர் சரபங்கா நதியில் கொட்டப்படும் இறைச்சிகள் மற் றும் கும்பைகளால், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் முழுவதுமாக மாச டைந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயத்திற் கும், குடிநீருக்கு பயன்படுத்த முடி யாத நிலை இருப்பதாக பொது மக்கள், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். &nbsp;சேலம் மாவட்டம் ஏற்காட் டில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் உற்பத்தியாகும் சர பங்கா நதி, டேனிஷ்பேட்டை, ஓம லூர், தாரமங்கலம், எடப்பாடி வழி யாகப் பாய்ந்து காவேரி நதியில் கலக்கிறது. வறட்சியைத் தாங்கி &nbsp;நிலத்தடி நீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு முக்கிய ஆதார மாக விளங்கும் இந்த ஆறு, தற் போது ஓமலூர் பகுதியில் மோச மாக மாசடைந்து துர்நாற்றம் வீசி &nbsp;வருவதால் பொதுமக்கள் மற்றும் &nbsp;விவசாயிகள் வேதனை தெரிவித் துள்ளனர். சரபங்கா நதி ஓமலூர் நகரில் இரண்டாகப் பிரிந்து கிழக்கு மற் றும் மேற்கு திசைகளில் சென்று, ஓம லூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் மீண்டும் ஒன்றா கக் கலந்து காவேரியில் சேருகி றது. மேற்கு நோக்கிப் பாயும் சர பங்கா நதியின் குறுக்கே உள்ள தடுப்பணைகளில் கடந்த சில மாதங் களாகப் பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆனால், இந்த நீரும் தற்போது &nbsp;மாசடைந்து வருகிறது. முக்கிய மாக, ஓமலூர் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு நிறைந்து, குப்பைக் கழிவுகள் சர பங்கா ஆற்றின் முழுவதிலும் பரவு கின்றன. மேலும், ஓமலூர் நகரின் மொத்தச் சாக்கடைக் கழிவுகளும், ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகளின் கழிவுகளும் நேரடியாக சரபங்கா நதியில் விடப்படுகின்றன. ஓமலூர் நகரத்திற்கு அருகி லுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்வேறு உயர்தர உணவகங்கள், தேநீரகங்கள், கன ரக வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையங்கள், கார் ஷோரூம்கள் மற்றும் விடுதிகளின் கழிவுகளும் நதியில் சேர்கின்றன. இந்தச் சாலைப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் குப்பைக் கழிவு கள் சரபங்கா ஆற்றுப் பாலத்தின் ஓரத்தில் கொட்டப்பட்டு, அவை தீ &nbsp;வைத்து எரிக்கப்படுகின்றன. இத னால், சரபங்கா நதி குப்பைக் கழிவு கள் கொட்டப்படும் ஓடையாகவே &nbsp;மாறி, முழுவதும் மாசடைந்துளு ளது. ஆற்றில் கழிவுகள் கலப்பதா லும், முட்புதர்களாலும், குப்பைக் &nbsp;குலங்களாலும் நிறைந்துள்ளதா லும், நதிநீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நிலத்தடி நீர் தரம் சீர் குலைந்து மாசு ஏற்படுவதால், இந்த &nbsp;நீரை விவசாயத்திற்கோ, குடி நீருக்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் &nbsp;தொற்று பரவும் அபாயம் உள்ள தாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் &nbsp;விவசாயிகள் கவலை தெரிவித்த னர். அழிவின் விளிம்பில் உள்ள சர பங்கா நதியைத் தூர்வாரி, ஆற்றங் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, நிலத்தடி நீர் மற்றும் &nbsp;விவசாயப் பயன்பாட்டிற்கு உதவும் &nbsp;வகையில் நதியை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிக ளின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வா கம் இதில் உடனடியாகத் தலை யிட்டு சரபங்கா நதியை மீட்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதே அனைவரின் எதிர்பார்ப்பா கும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.