தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள்: கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள்: கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்</strong></p>
<p>பாபநாசம், பிப்.8 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் தாலுகா விற்கு உட்பட்ட பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணி நடந்து வரு கிறது. மெலட்டூர் அருகே ரெங்கநாத புரம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில், கொள்முதல் செய்ய வேண்டிய நெல் மணிகள் குவியல், குவியலாக தேக்க மடைந்துள்ளன. விவசாயிகள் தங்களது நெல்லை கொட்டி வைத்து, காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல்மணியை உடனடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடையை அதிகமாக வைத்து கொள்முதல் செய்து வருவதாக வும், அது போன்ற இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, எடையை சரியான அளவு வைத்து கொள்முதல் செய்ய உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார் தெரி வித்தார்.</p>
<p> </p>
