சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.2 உண்ணாநிலை: விவசாயிகள் அறிவிப்பு
30 Dec 2025, 5:57 pm
<p><strong>சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.2 உண்ணாநிலை: விவசாயிகள் அறிவிப்பு</strong></p>
<p>நாமக்கல், டிச.30- சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.2 ஆம் தேதி யன்று உண்ணாநிலை இயக்கம் நடத்தவுள்ளதாக, நாமக்கல் ஆட் சியர் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளர் ஆகியோரிடம் விவ சாயிகள் திங்களன்று மனு அளித்த னர். நாமக்கல் மாவட்டம், மோக னூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 882 ஏக்கர் பரப்பள வில், தமிழக அரசின் சார்பில் சிப் காட் தொழிற்பேட்டை அமைக்கப் பட உள்ளது. அப்பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என அப்பகு தியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தி னர் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பல்வேறு தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலா ளர் பாலசுப்ரமணியன் தலைமை யில், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்கு மார், ரவீந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்கள், சிப்காட் திட்டம் தொடர்பாக, பாதிக் கப்பட்ட 98 சதவீதம் பேர், ஏற்க னவே, நில நிர்வாக ஆணைய ருக்கு, இரண்டு முறை ஆட்சே பனை மனுக்களை அளித்துள்ள னர். இருந்தும், நில நிர்வாக ஆணை யர் அனுப்பியதாக, வி.ஏ.ஓ., சம் பந்தப்பட்ட விவசாயிகளிடம் நோட் டீஸ் கொடுத்து கையெழுத்து வாங்கி வருகிறார். சில நோட்டீஸ் கள், வளையப்பட்டி தபால் அலுவ லகத்தில் இருந்து பதிவு தபாலில் அனுப்புகிறார். இது, இப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த அச்சத் தையும், குழப்பதையும் ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில் சீலும், கையெழுத் தும் இல்லை. தமிழக முதல்வர் இது குறித்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும். மேலும், தொடக்கத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தை தாண்டி யாரோ செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் உள்ளது. அதனால், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மோகனூர் பகு தியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் வரும் ஜனவரி 2 முதல், வளையப்பட்டி அருகில் உள்ள கஸ்தூரிரங்கன் மலை அருகில் தொடர் உண்ணாநிலை இயக்கத்தில் ஈடுபட உள்ளோம். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சி யர் மற்றும் காவல்துறை கண்கா ணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் அளித்துள்ளோம், என்றார்.</p>
