வெண்ணமலை மக்களுக்கு ஆதரவாக டிச.4-இல் விவசாயிகள், அடிமனை பயனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>வெண்ணமலை மக்களுக்கு ஆதரவாக டிச.4-இல் விவசாயிகள், அடிமனை பயனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கரூர், நவ.24 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர் வெண்ண மலை மக்களுக்கு ஆதரவாக டிச.4-இல் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வெண்ணமலையில் நீதி மன்றம் உத்தரவு என்ற பெயரில் அறநிலையத் துறை மூலம் குடியிருக்கும் மக்களையும், சிறு வணிக நிறுவனங்கள் இனாம் விவசாய நிலங்க ளில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து 14 நாட்கள் போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்தி ரன், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநிலச் செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் வ. செல்வம், பொருளாளர் டி.துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், சிபிஎம் மாநகரச் செயலாளர் தண்டபாணி, கரூர் ஒன்றியச் செய லாளர் சி.முருகேசன், விச மாவட்டப் பொருளா ளர் கே.சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செய லாளர் எ.நாகராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.சிவா, மாவட்டத் தலைவர் பி.சதீஷ் ஆகியோர் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களது கோரிக் கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகள் குடியிருப்பு மற்றும் அனுபவத்தில் இருந்து வெளியேற்றா மல் இருக்க தமிழக அரசு சட்ட மன்றத்தில் சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி, இம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 4 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.</p>
