முந்தய பக்கம்

விவசாயிகள் பயிற்சி முகாம்

22 Feb 2026, 3:26 pm
விவசாயிகள் பயிற்சி முகாம்
<p><strong>விவசாயிகள் பயிற்சி முகாம்</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.22- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக, ஒன்றிய அளவிலான ஒரு நாள் விவசாயிகள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. &nbsp;இப்பயிற்சி முகாமில் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நவீன தொழில் நுட்ப கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, கால்நடைத்துறை மருத்துவர்கள் விளக்கமளித்தனர். மேலும், மண்புழு உரம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. &nbsp;கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு. இ. விஜயராகவன் மற்றும் மரு. சா. வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கால்நடை உதவி மருத்துவர்கள் கவிதா, ஜென்சிலின், மருதமுத்து ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். முகாமில், கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்புக் கையேடு மற்றும் தாது உப்புக்கலவை, தீவன விதைகள், மண்புழு உரம் அடங்கிய பயிற்சி &nbsp;தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram