தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க போராட்ட அறிவிப்புக்கு வெற்றி அழிக்கப்பட்ட அரணி வாய்க்கால் சீரமைப்பு

10 Mar 2026, 3:51 pm
விவசாயிகள் சங்க போராட்ட அறிவிப்புக்கு வெற்றி அழிக்கப்பட்ட அரணி வாய்க்கால் சீரமைப்பு
<p><strong>விவசாயிகள் சங்க போராட்ட அறிவிப்புக்கு வெற்றி அழிக்கப்பட்ட அரணி வாய்க்கால் சீரமைப்பு</strong></p> <p>திருப்பூர், மார்ச் 10 - காங்கேயம் வட்டத்தில் பெண் விவ சாயி ஒருவரது நிலத்திற்கு சென்ற அரணி வாய்க்காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் அழித்து விட்டனர். பாதிக் கப்பட்ட பெண் விவசாயி உடன் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போராட்ட அறி விப்பு செய்திருந்த நிலையில், அழிக்கப் பட்ட அந்த அரணி வாய்க்காலை மீண் டும் சீரமைத்து, அந்த பெண் விவசாயி யின் நிலத்திற்கு பிஏபி தண்ணீர் வரு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் ஆலம்பாடி ஊராட்சி வெராங் கட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் சி. ராதாமணி. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப் பினராக உள்ளார். இவருக்கு புல எண் &nbsp;398/2 இல் சுமார் 4 ஹெக்டேர் பரப்புள்ள &nbsp;பூமிக்கு பிஏபி கால்வாய் அரணி வாய்க்கால் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது தண்ணீர் வரும் நிலையில் அரணி வாய்க்காலை அப்ப குதியை சேர்ந்த சிலர் அழித்து விட்டனர். எனவே அவர்கள் மீது அரணி &nbsp;வாய்க்கால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், குற்றவியல் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கவும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. &nbsp;இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் காங்கேயம் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு செவ் வாய்க்கிழமை காலை 10 மணி முதல் &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட ராதாமணி குடும்பத்தின ருடன் இணைந்து தொடர் காத்திருப்புப் &nbsp;போராட்டம் நடத்துவது என்று அறிவித் தனர். எனினும் கோவை நெடுஞ்சாலை யில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள &nbsp;பகுதியில் வட்டாட்சியர் அலுவல கத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத் தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று காவல் துறையினர் அனுமதி &nbsp;மறுத்திருந்தனர். எனினும் திட்டமிட்ட படி போராட்டம் நடத்த விவசாயிகள் &nbsp;சங்கத்தினர் தயாரானார்கள். &nbsp;இந்நிலையில் செவ்வாயன்று காலை 8 மணியளவில் காங்கேயம் வட் டாட்சியர், நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் மற்றும் காவல் துறை அதி காரிகள் ஆலம்பாடி ஊராட்சி வெராங் கட்டு வலசு கிராமத்திற்கு வந்து ராதாம ணியின் நிலத்திற்கு அரணி வாய்க் காலில் பிஏபி தண்ணீர் வருவதற்கு ஏற் பாடு செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் &nbsp;சங்கம் போராட்டம் அறிவித்த நிலை யில், நீண்ட காலமாக அரணி வாய்க் கால் பிரச்சனையில் நடவடிக்கை &nbsp;எடுக்காமல் இருந்த நீர்வளத் துறை அதி காரிகள் ராதாமணி நிலத்திற்கு பிஏபி &nbsp;தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தி ருப்பது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பொ. வேலுச்சாமி தெரிவித்திருக்கிறார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.