தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

18 Dec 2025, 5:31 pm
சிதம்பரம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
<p><strong>சிதம்பரம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு</strong></p> <p>சிதம்பரம், டிச.18- சிதம்பரம் அருகே விவசாயிகள் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்க வேண்டும், விடுபட்ட அனைவருக்கும் கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் மற்றும் சேதங்களை வேளாண் செயலி மூலம் கணக்கிடாமல் அரசு அதிகாரிகளைக் கொண்டு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மேலசாவடி பகுதியில் மறியலுக்குத் திட்டமிடப்பட்டது. இதுகுறித்து வட்டாட்சியர் கீதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவர் ரவீந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் கற்பனைச் &nbsp;செல்வம், செயலாளர் கண்ணன், நிர்வாகி ஹாஜாமைதீன், ஒன்றியச் செயலாளர் ஜீவா, விவசாயிகள் தியாகராஜன், நூருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். &nbsp;கோரிக்கைகள் குறித்து ஆட்சி யரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. கோரிக்கை கள் நிறை வேறாவிடில் டிசம்பர் 23-இல் மீண்டும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.