பேரணாம்பட்டு ஏரியைத் தூர்வார விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
30 Nov 2025, 4:29 pm
<p><strong>பேரணாம்பட்டு ஏரியைத் தூர்வார விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>வேலூர், நவ.30- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடி யாத்தம் - பேரணாம்பட்டு தாலுகா மாநாடு, மேல் செட்டிக்குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைவர் சி. தசரதன் தலைமை தாங்கினார். மூத்த தோழர் சி.எம். நடராஜன் சங்கக் கொடியேற்றி வைக்க, சி.என். இராம்குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் நரசிம்மன் மாநாட்டைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் கே. சாமி நாதன் நிறைவு செய்து பேசினார். விதொச மாவட்டச் செயலாளர் செ. ஏகலைவன் மற்றும் தலைவர் பி. குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர்.மாநாட்டில் புதிய தாலுகா தலைவராக சி. தசரதன், செயலாள ராக ஜி. சரத்குமார், பொருளாளராக கோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் விவசாயிகளின் நலன் காத்திட பேர ணாம்பட்டு ஏரியைத் தூர்வார வேண்டும்.கார்கூர் ஊராட்சியில் ஆதிதிராவிட மக்கள் 27 பேருக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்.மேலாலத்தூர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை துவங்க வேண்டும். கரும்பு, பால், தென்னை, கறிக்கோழி வளர்ப்பு போன்ற விவசாயத் தொழில் களைப் பாதுகாத்திட வேண்டும்.வட்டாரக் கால்நடை மருத்துவமனையை மேம்படுத்தி நிரந்தர மருத்துவர் மற்றும் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும். குடியாத்தம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியத் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.<br />
</p>
