மண் பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய விவசாய சங்கத்தினர்
11 Jan 2026, 7:00 am
<p><strong>சாலை வசதி கேட்டு தொடர் போராட்டம்: விவசாய சங்கத்தினர் கைது</strong></p>
<p>நாமக்கல், ஜன.12- எருமப்பட்டி அருகே போதிய சாலை வசதி இல்லாததால் தினந்தோறும் ஏரா ளமான பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருவதாக கூறி தொடர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் அடுத்துள்ள எருமப்பட்டி ஒன்றி யம் பொன்னேரி கைகாட்டி பகுதியில் இருந்து, கோம்பை வரை சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயப் பிரதிநிதிகள் மற் றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். அந்த இடம் ஓடை புறம்போக்கு நிலமாக இருப்ப தால், அதில் சாலை அமைக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில் அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டு, உடனடியாக பொன்னேரி கைகாட்டி பகுதியில் இருந்து கோம்பை வரை உள்ள ஓடைப்புறம்போக்கு நிலத்தில் தற் காலிக மண் சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் செய்யும் கடந்த மாதத் தில் தொடங்கி நடைபெற்று வந்தது. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மீதமுள்ள 10% சதவீதம் நிலம் அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி யில் விவசாய நிலத்தின் உரிமையாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலம் அளவீடும் செய்யும் பணி நிறுத்தப் பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் மீண்டும் போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்று வந்த நிலையில், சனியன்று மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன் பாடு ஏற்படாத நிலையில் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.</p>
