கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு
5 Dec 2025, 4:21 pm
<p><strong> கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுகமாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச.5- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் கல்வராயன் மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களை காப்புக்காடுகளாக மாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும்.2006 வன உரிமைச் சட்டத்தின்படி 2013, 2019 அன்று அளிக்கப்பட்ட 7,103 மனுக்களுக்கு முழுமையாகப் பட்டா வழங்க வேண்டும். சென்ற ஆட்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய விவ சாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மீது தியாகதுருகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். வனத் துறை கட்டுப்பாட்டில் செம்பியன்மாதேவி முதல் பொறையூர் வரை உள்ள சாலைகளை வனத் துறை மேம்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. எனவே, இரு புறமுள்ள முட்புதர்களை அகற்றி, சாலை ஓரத்தில் கிராவல் மண் அடித்து மேம்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.அண்ணாமலை, ஏ.செல்வராஜ், சி.பி.எம். வட்டச் செயலாளர் வி.ஏழுமலை, சங்கரா புரம் ஒன்றியச் செயலாளர் சிவாஜி ஆகி யோர் கலந்து கொண்டனர்.</p>
