வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் இயக்கம்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் இயக்கம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, பிப்.24- திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இனாம்குளத்தூர், கள்ளிக்குடி பஞ்சாயத்துகளில் நிலமற்ற, வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரியும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணிகண்டம் ஒன்றியக் குழு சார்பில், திங்களன்று மனு கொடுக்கும் இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. மனு கொடுக்கும் இயக்கத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன், கிளைச் செயலாளர் தங்கவேலு, சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் மணிமாறன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராசு, ஒன்றியக் குழு உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் 586 பேர் இலவச வீட்டுமனை கேட்டும், 161 பேர் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p>
