விதைச்சட்ட மசோதா நகல் எரிப்பு: விவசாயிகள் சங்கம் ஆவேசம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>விதைச்சட்ட மசோதா நகல் எரிப்பு: விவசாயிகள் சங்கம் ஆவேசம்</strong></p>
<p>ஈரோடு, டிச.10- விதைச்சட்ட மசோதா மற்றும் மின் சார சட்ட மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நகல் எரிக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொண்டு வந் துள்ள விதைச்சட்ட மசோதா மற்றும் மின்சார சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதனன்று நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க தாலுகா பொருளாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இதில் எஸ்கேஎம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி, நிர்வாகிகள் அர்சுணன், முத்து பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்தியூர் வட்டம், தொப்பபாளையத் தில் தாலுகா செயலாளர் த.ஆனந்தன், கள்ளிமடைகுட்டையில் தாலுகா தலை வர் ஆர்.கணேசன், வெங்கிட்டுரெட்டி யூரில் தாலுகா துணைத்தலைவர் விஜயா, குருவரெட்டியூரில் ஆனந்த ராசு, சத்தியமங்கலம் வட்டம், பெரிய குளத்தில் தாலுகா தலைவர் பி.கணேசன் ஆகியோர் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. நீலகிரி நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, மாவட் டப் பொருளாளர் குஞ்சு முகமது, சிபிஎம் கிளைச் சொலாளர் சீபுரம் அபு, விவசாயி கள் சங்க நிர்வாகிகள் கோபிநாதன், தங்கராஜ், யோக சசி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட வன அலுவலரை சந்தித்து மனு வழங்கப்பட்டது. தருமபுரி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கொண்டி செட்டிப்பட்டி, பெரி யாம்பட்டி ஆகிய இடங்களில் நடை பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச் சுனன், மாவட்ட நிர்வாகி ஆர்.சின்ன சாமி, ஆகியோர் பங்கேற்று பேசினர். நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராமத் தில் வட்டச் செயலாளர் முனியப்பன், பென்னாகரத்தில் மாவட்டத் தலைவர் எம்.குமார், செம்மாண்ட குப்பத்தில் மாவட்ட நிர்வாகி என்.கந்தசாமி, பாலக் கோட்டில் வட்டத் தலைவர் ஜி.நக்கீரன், செயலாளர் பி.முருகன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற் றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில், 50 மையங்களில் விவசா யிகள் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் நிர்வாகி எஸ்.கே.சிவச் சந்திரன் தலைமை வகித்தார். விவசாயி கள் சங்க ஒன்றியத் தலைவர் மற்றும் ஐக்கிய விவசாயி முன்னணி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.து.செல்வ ராஜ் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். சத்யா, விவசாயிகள் சங்க கிளைச் செய லாளர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஊத்துக்குளி தாலுகா செங்கப் பள்ளியில் சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கங் களின் தாலுகா செயலாளர்கள் ஜி. கே.கேசவன், எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் தலைமையில் புதனன்று நடைபெற்றது‌. இதில், எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். உடுமலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உடுமலை ஒன்றியம் பள்ள பாளையம், கொடிங்கியம், மருள்பட்டி, பொன்லாம்மன் சோலை, வல்லக் குண்டாபுரம் மற்றும் ஜல்லிபட்டி ஆகிய ஆறு பகுதிகளில் விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் ஒன்றியத் தலைவர் பால தண்ட பாணி, செயலாளர் அருண் பிரகாஷ், பொருளாளர் ராஜகோபால் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்து கண்டன் முழக்கங்கள் எழுப்பினர்.</p>
